ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்தில் கமலா டவருக்கு பின்னால் ஜெயின் கண்ணாடிக் கோயில் அமைந்துள்ளது. முழுக்கவும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ள இது நாட்டிலுள்ள ஜெயின் கோயில்களிலேயே முக்கியமான கோயிலாக புகழ்பெற்றுள்ளது.
இதன் மேற்கூரைப்பகுதி, தரைப்பகுதி, தூண்கள், மறைப்புகள், தூண்கள் மற்றும் கதவுகள் யாவற்றிலும் எனாமல் பூச்சு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோயிலின் உள்ளே புராதன கலை மரபுகளும், ஜைன வேத வாசகங்களும் அழகான கண்ணாடி வேலைப்பாடுகளாக வடிவமைக்கப்பட்டிருப்பதை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
அலங்கார தோரண வளைவுகளையும் அழகிய பளிங்குக்கல் வேலைப்பாடுகளையும் கூட இதன் உட்புறத்தில் காணலாம். 23 ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் மட்டுமல்லாமல் மஹாவீரரின் வித்தியாசமான சிலைகளையும் இங்கு பார்க்க முடிகிறது.



Click it and Unblock the Notifications