Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நக்கர் » ஈர்க்கும் இடங்கள் » ஜகதிபட் கோயில்

ஜகதிபட் கோயில், நக்கர்

19

நக்கர் சுற்றுலாத்தலத்தில் உள்ள முக்கியமான அம்சங்களில் ஒன்றான இந்த ஜகதிபட் கோயில் நக்கர் கோட்டை வளாகத்திலேயே அமைந்துள்ளது. இந்த கோட்டை தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக்கதையின்படி கடவுளரும், தேவியரும் தேனிக்களாக மாறி பிருகு துங் மலையிலிருந்து ஒரு பாறைப்பலகையை பெயர்த்தெடுத்து தூக்கி வந்து இந்த நக்கர் நகரத்தை ஒரு புனித நகரமாக மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இந்தக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள அந்த பாறைப்பலகை குல்லு மாவட்டத்திலேயே மிக உயரமான தேவ் திப்பா சிகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் மற்றொரு உள்ளூர் நம்பிக்கை நிலவுகிறது.

அதுமட்டமல்லாமல், இப்பகுதி மக்களை இடர்களிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த கோயிலில் தெய்வங்கள் ஒன்று கூடுவதாகவும் உள்ளூர் மக்களிடையே ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

அளவில் சிறியதான இந்த கோயில் சதுர வடிவில் காணப்படுகிறது. 5 அடி நீளமும், 8 அடி அகலமும், 6 அங்குல கனமும் கொண்ட ஜகதிபட் எனும் பாறைப்பலகை இக்கோயிலில் உள்ளது.

மரக்கட்டுமானத்துடன் காட்சியளிக்கும் இக்கோயில் ஹிமாச்சால பிரதேச பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கற்பலகைகள் மற்றும் தேவதாரு மரப்பலகைகள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு பூகம்பத்தை தாங்கும் சக்தி கொண்டதாக இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. நக்கர் நகரத்திற்கு அருகிலேயே உள்ள இந்த கோயிலுக்கு சாலை வழியாக சுலபமாக சென்றடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat