குல்லு பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த நக்கர் சுற்றுலாத்தலத்தில் பல மலையேற்றப்பாதைகள் உள்ளன. பயன்பாட்டில் உள்ள இந்த பாதைகளின்வழியே டிரெக்கிங் பிரியர்கள் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.
இவை அருகிலுள்ள கிராமங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மலானா கிராமத்துக்கு செல்லும் சந்தர்கனி பாஸ், சிம்லாவுக்கு செல்லும் ஜலோரி பாஸ் மற்றும் சரஹன் எனுமிடத்துக்கு செல்லும் பின் பார்வதி பாஸ் போன்றவை இங்குள்ள குறிப்பிடத்தக்க மலையேற்றப்பாதைகளாகும். சாகசப்பொழுதுபோக்கிற்கும் இயற்கை புகைப்படக்காட்சிகளுக்கும் இந்த மலைப்பாதைகள் பிரசித்தி பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications