ரேணுகா ஏரி, நஹன்

நஹான் எனும் இடத்திலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள இந்த ரேணுகா ஏரி ஹிமாசல பிரதேசத்தின் புகழ் பெற்ற சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. 672மீ நீளமுள்ள இந்த ஏரி ஹிமாசல பிரதேச மாநிலத்திலுள்ள பெரிய ஏரியாகவும் கருதப்படுகிறது.

புராணக்கதைகளின்படி, ஏழு முக்கிய ரிஷிகளுள் ஒருவரான ஜமதக்னி முனிவர் ஒரு முறை கடுங்கோபத்தில் தன் மகன் பரசுராமரிடம் தன் மனைவியான ரேணுகா தேவியை கொன்றுவிடுமாறு ஆணியிட்டார்.

தந்தை வாக்கு தவறாத அந்த மகனும் தன் தாயையே கொன்று விட்டார். பின்னர் இருவரும் தம் தவறுக்கு வருந்தி ரேணுகா தேவி உறங்குவதைப்போன்ற தோற்றம் கொண்ட இந்த ஏரியை உருவாக்கினர் என்பதாக அந்த புராணிகக்கதை முடிகிறது.

இந்த அழகான ஏரிக்கு விஜயம் நவம்பர் மாதம் பொருத்தமாக உள்ளது. அச்சமயம் ஒரு பிரம்மாண்டமான சந்தை ஒன்று இந்த ஏரிப்பகுதியில் நடத்தப்படுகிறது. 3214 மீ சுற்றளவைக்கொண்ட இந்த ஏரியில் பயணிகள் படகுப்பயணமும் மேற்கொள்ளலாம். கூடுதல் சிறப்பம்சம்சமாக ஏரியின் கரையில் ரேணுகா கோயிலும் அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...