Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஹன் » ஈர்க்கும் இடங்கள் » ரேணுகா வனவிலங்கு சரணாலயம்

ரேணுகா வனவிலங்கு சரணாலயம், நஹன்

26

நஹன் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, சிர்மார் மாவட்டத்தைச் சேர்ந்த தடாகு என்ற சிறிய நகரத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலம் ரேணுகா வனவிலங்கு சரணாலயமாகும்.

402.80 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயத்தில் ரேணுகா ஏரியும், எண்ணற்ற தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கினங்களையும் காணலாம்.

சிங்கவால் மக்காவ் குரங்குகள், ஆசிய சிங்கங்கள், சிவந்த கழுத்துடைய காட்டுக் கோழிகள், கொம்புகளுடன் கூடிய இந்திய மான் வகைகள், சம்பார், சிட்டல் மற்றும் இமாலய கருப்புக் கரடிகள் ஆகிய பல்வேறு காட்டு விலங்குகளையும் இங்கே காண முடியும்.

பிளாக் பீசன்ட், மயில்கள் மற்றும் பல்வேறு விதமான நீர்ப் பறவைகள் ஆகியவற்றின் வண்ணமயமான ஊர்வலத்தை காண ஏற்ற இடம் இந்த சரணாலயமாகும். பொழுதுபோக்கு வசதிகளுக்காக சிங்கங்களை காணச் செல்லும் சுற்றுப்பயணங்கள் (Lion Safaris), படகு சவாரி மற்றும் மலையேற்றம் ஆகிய அம்சங்களும் நிறைந்திருக்கும் இடம் இந்த சரணாலயமாகும்.

இந்த வனவிலங்கு சரணாலயத்திற்குள் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையும் உள்ளது. இந்த சரணாலயத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ற தேநீர் விடுதிகளும், பயணியர் மாளிகையும் உள்ளன. இந்த சரணாலயத்திற்கு அருகில் உள்ள மற்றுமொரு பார்வையிடமாக ஒரு கோவிலும் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed