ஆர்யபட்டா ரிசர்ச் இன்ச்டியூட் ஆஃப் அப்சர்வேஷனன் சைன்சஸ் எனப்படும் இந்த அறிவியல் ஆராய்ச்சி மையம் நைனித்தால் நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
நைனித்தால் நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் மனோரா எனும் சிகரத்தின் உச்சியில் இந்த மையம் உள்ளது. வானவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கான இந்த மையத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை தெளிவான இரவு நேரங்களில் சக்திவாய்ந்த நவீன தொலைநோக்கிகள் மூலம் பயணிகள் நோக்கலாம். இதற்கு விசேஷ முன் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
1955ம் ஆன்டு துவங்கப்பட்ட இந்த ஆய்வு மையம் இதன் தற்போதைய இடத்துக்கு 1961ம் ஆண்டு மாற்றப்பட்டது. வான் இயற்பியல் தொடர்பான பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. செயற்கைக்கோள்களின் பாதையை ஒளியியல் ரீதியாக கண்காணிக்கும் பணியிலும் இந்த மையம் ஈடுபட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications