செயிண்ட் ஜான் இன் தெ வைல்டர்னஸ் சர்ச் எனப்படும் இந்த கிறித்துவ தேவாலயம் மல்லித்தால் எனப்படும் நைனி ஏரி வடமுனையில் அமைந்துள்ளது. இது 1844ம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கல்கத்தாவை சேர்ந்த வில்சன் எனும் பிஷப் இந்த தேவாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. வரும் வழியில் நோய்வாய்ப்பட்ட அவர் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு கட்டி முடிக்காத வீட்டில் தங்க நேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
எனவேதான் இந்த தேவாலயத்திற்கு வைல்டர்னஸ் சர்ச் என்ற பெயர் வந்துள்ளது. 1880ம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் ஞாபகார்த்த ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள ஒரு பித்தளை ஏட்டில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications