புகழ்பெற்ற வேத காலத்தைய நதியாகிய சரஸ்வதி வற்றிப் போய்விட்டதனால், அதன் பெயர் விளங்க வேண்டும் என்ற நோக்கில், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கீரில் உள்ள பழமையான இந்நதி சீரமைக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகம் முயற்சி எடுத்து நிலத்தைத் தோண்டி நீரை வரவழைத்து, இந்த நதிக்கு புத்துயிர் அளித்துள்ளது. இந்நதியின் கரையோரங்களில் மக்கள் முங்கி நீராடும் வகையில் படித்துறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நதியின் நீர்மட்டத்தை எட்டுவதற்கு, நீர்ப்பாசனத் துறை சுமார் 3.5 கி.மீ ஆழம் வரை தோண்ட வேண்டியதாய் இருந்திருக்கிறது. மரித்துப் போய் வெறும் மணல் பரப்பாகிப் போனதாகக் கருதப்பட்ட சரஸ்வதி நதி தற்போது அதன் அசல் பொலிவோடு பிரவகித்துக் கொண்டிருக்கிறது.
பழங்கால ஆன்மீகக் குறிப்புகள் இந்நதியின் புனிதத்தன்மையை விரிவாகக் குறிப்பிட்டுள்ளன. வாயு புராணத்தில், இப்புனித நதியில் ஒரு முறை முங்கி எழுவது, கங்கை நதியில் ஒரு வருடம் முழுக்க நீராடுவதற்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications