இந்த சப்பா எனும் ரம்மியமான சிறு கிராமம் நால்தேஹ்ராவிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடத்திலிருந்து தட்டபாணி வரை 11 கி.மீ நீளத்துக்கு சட்லெஜ் ஆற்றில் படகுச்சவாரிக்கேற்ற ஆற்றுப்பாதை உள்ளது. பயணிகளுக்காக கார்நிறுத்தும் வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
மேலும் நன்கு அனுபவம் உள்ள படகோட்டிகளும் பயிற்சியாளர்களும் இந்த படகுத்துறையில் கிடைக்கின்றனர். மே மற்றும் ஜூன் மாதங்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் படகுச்சவாரிக்கு உகந்தவையாக உள்ளன.



Click it and Unblock the Notifications