16-வது நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட நாமக்கல் துர்கம் கோட்டையானது, நாமகிரி மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோவிலுக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இந்த கோட்டையின் பரப்பளவு 1.5 ஏக்கராகும்.
கோட்டையின் தென் மேற்கு பகுதியில் உள்ள குறுகலான படிக்கட்டுகளின் வழியே இந்த கோட்டையை நாம் அடைய முடியும். நாமகிரி மலையின் இரு புறத்திலும் நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ரங்கநாத சுவாமி கோவில் ஆகியவை உள்ளன.
இந்த கோவில்களில் இருக்கும் சிலைகள் மற்றும் இதர உருவங்கள் இங்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் புதிய பாறைகளிலிருந்து வடிக்கப்பட்டிருப்பதால் அவை இன்றளவும் நிலைத்திருக்கின்றன.
இந்த பாறைகளிலிருந்து உற்பத்தியாகும் எட்டு நீர்ச்சுனைகளையொட்டி தாமரை மலர்களும் வளர்ந்து வருகின்றன. திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த கோட்டையில சில காலம் மறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
பிறகு இந்த கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். இந்த கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டிடக்கலை அமைப்புகள் இதனை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.



Click it and Unblock the Notifications