பல ஆண்டுகள் வாழக்கூடிய உயிர் காக்கும் தாவரங்களால் சூழப்பட்டும் , ஆண்டின் எந்த பருவத்திலும் வற்றாத ஜீவ நதியாகவும் ஓடிக்கொண்டிருக்கும் அம்ரிதா சரோவர் ஏரியை பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டும். இந்த காரணத்துக்காகவே அம்ரிதா சரோவர் 'அம்ப்ரோசியா ஏரி' என்றும் 'நெக்டார் ஏரி' என்றும் அழைக்கப்படுகிறது. நிலவொளியில் நட்சத்திரங்களை போல் மின்னும் ஏரியின் அழகை காண கண் கோடி வேண்டும். பெங்களூரிலிருந்து 68-கிலோ மீட்டர் தொலைவில் அம்ரிதா சரோவர் ஏரி அமைந்துள்ளது. யோக நந்தீஸ்வரா ஆலயம், சபூத்ரா மற்றும் உக்கிர நரசிம்ம கோயில் ஆகிய இடங்கள் ஏரிக்கு அருகாமையில் உள்ளன.



Click it and Unblock the Notifications