கனிவெனராயனபுரா நகரம் நந்திக் குன்றிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் நகரத்தை சுற்றி உள்ள ஸ்கந்த கிரி, பிரம்ம கிரி, நந்திக் குன்று மற்றும் சன்ன கிரி போன்ற குன்றுகளை கண்டு ரசிக்கலாம்.
கனிவெனராயனபுராவுக்கு சுகாதார வசதி, பள்ளி மற்றும் வேலை வாய்ப்பு வசதி போன்றவற்றை சத்ய சாய்பாபா குழந்தைகள் அமைப்பினர் செய்து வருகின்றனர். பள்ளிக்கூடங்கள், மருத்தவமனைகள், பூங்காக்கள் உள்ளிட்டவை இந்நகரத்தில் கட்டப்பட்டு வருகின்றன.
கனிவெனராயனபுரா அதன் வளமையான நிலங்களுக்காகவும், தேங்காய், பட்டு, திராட்சை உற்பத்திக்க்காகவும் பிரசித்தி பெற்றது. மகாத்மா காந்தி நந்திக் குன்று செல்லும் வழியில் இங்கு சில காலம் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. திப்பு சுல்தானின் கோடை கால வாசஸ்தலம் கனிவெனராயனபுராவுக்கு அருகில் தான் உள்ளது.



Click it and Unblock the Notifications