கோபிகாபாய் பேஷ்வா மகாராணியால் கட்டப்பட்ட இந்த ஆலயம் புண்ணிய யாத்ரிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இது திரியம்பேஷ்வர் ஆலய வடிவமைப்பை போன்றே கட்டப்பட்டுள்ளது. திரியம்பேஷ்வர் ஆலயம் கலாராம் கோயிலிலிருந்து சில மைல் தொலைவில், அமைந்துள்ளது.
70 அடி உயரம் காணபடும் கலாராம் கோயிலின் சிகரம் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளையால் உருவாக்கப்பட்டு காணப்படுகிறது. ராம பகவான் மற்றும் லட்சுமணரின் உருவச்சிலைகள் இந்த கோயிலுள் காட்சியளிக்கின்றன.
அருகிலேயே ஒரு கணபதி கோயில், ஹனுமான் கோயில் மற்றும் விட்டல் கோயில் போன்றவையும் இங்கு தரிசிக்க இருக்கின்றன.



Click it and Unblock the Notifications