நாதத்துவாரா நகருக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக நீங்கள் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீநாத்ஜி கோயிலை தவற விட்டுவிடக் கூடாது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான கிருஷ்ண பகவானின் சிலை கருப்பு சலவைக்கல்லால் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அற்புதமானது.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிறகு இந்தியாவிலேயே மிகவும் செல்வச் செழிப்புடைய கோயிலாக ஸ்ரீநாத்ஜி கோயில் கருதப்படுகிறது. அதோடு இந்தக் கோயிலுக்கு நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications