அப்சத் எனும் பிரசித்தமான விஷ்ணு கோயில் ஸ்தலம் நவாதாவிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அற்புதமான கோயில் வருடம் முழுதுமே திறந்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்களும் யாத்ரீகர்களூம் இந்த கோயிலை தரிசிப்பதற்காக வருகை தருகின்றனர்.
இங்கு பல வரலாற்றுச்சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதால் இந்திய தொல்லியல்துறை இந்த கோயில் ஸ்தலத்தை முக்கியமான இடமாக பாதுகாத்து வருகிறது. மனித உருவங்கள் மற்றும் மிருக உருவங்கள் போன்ற சுடுமண் சிற்பங்களும் இங்கு கிடைத்திருக்கின்றன.
கல்லால் ஆன விஷ்ணு சிலை இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மண்ணால் ஆன மணிகள், கண்ணாடிகள், வளையல்கள், சிறு பானைகள், பாத்திரங்கள் மற்றும் ஜாடிகள் போன்ற வரலாற்று மிச்சங்கள் இந்த இடத்தில் கிடைத்துள்ளன. வரலாற்று மற்றும் தொல்லியல் ரசிகர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இந்த அப்சத்.



Click it and Unblock the Notifications