Search
  • Follow NativePlanet
Share
» »பிச்சை எடுத்தே ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பாரத் ஜெயின் - உலகின் பணக்கார பிச்சைக்காரர்!

பிச்சை எடுத்தே ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பாரத் ஜெயின் - உலகின் பணக்கார பிச்சைக்காரர்!

இந்த தலைப்பே உங்களுக்கு சற்று விசித்திரமாக இருக்கிறது அல்லவா, ஆனால் இது உண்மை தான். ஒருவர் பிச்சை எடுத்தே ரூ.7.5 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக மாறியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை! இந்திய நிதி தலைநகரில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் எனும் நபர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் ஆவார். ஆம்! அவர் பிச்சை எடுப்பதன் மூலம் தினமும் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிக்கிறார். அதுமட்டுமல்ல, பிச்சை எடுத்தே மும்பை நகரில் பெரிய அபார்ட்மெண்ட்டில் வீடு, கடைகள் எல்லாம் வாங்கியுள்ளாராம்!

Bharat jain a Mumbai

உலகின் பணக்கார பிச்சைக்காரர் - மும்பையை சார்ந்த பாரத் ஜெயின்

உணவில்லாமல், கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு, தங்க இடமில்லாமல், அனைவரிடமும் யாசகம் கேட்பவர்களே பிச்சைக்காரர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம்! இது பொதுவாக வறுமையுடன் தொடர்புடையது. இருப்பினும், சிலர் பிச்சை எடுப்பதை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றி, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் பிச்சை எடுத்து கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர், இது உங்களை ஆச்சரியப்படுத்தும். மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் அப்படிப்பட்ட கோடீஸ்வர பிச்சைக்காரர்.

பிச்சையெடுத்து தினமும் ரூ.2,500, மாதம் ரூ.75,000 வருமானம்

உலகின் மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரரான பாரத் ஜெயின் திருமணமாகி தனது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு சகோதரர் மற்றும் அவரது தந்தையுடன் வசித்து வருகிறார். பிச்சையெடுப்பதன் மூலம் பாரதம் ஒவ்வொரு மாதமும் 75,000 ரூபாய் சம்பாதிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் அவரது மொத்த வருமானம் ரூ 9 லட்சம். தினமும் ரூ.2,500 பிச்சை எடுத்தே சம்பாதிக்கிறார். ஒரு சாதாரண வேலை செய்பவர் கூட தினசரி இவ்வளவு சம்பாதிக்க முடியாது, ஒரு சிறிய கடைக்காரரால் தினமும் இவ்வளவு சேமிக்க முடியாது.

அபார்ட்மெண்ட் வீடு, கான்வென்ட் பள்ளியில் படிப்பு

பாரத் ஜெயின் பிச்சை எடுத்தே மும்பை மற்றும் புனேயில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் மற்றும் கடைகளை வாங்கியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் பரேலில் 1.25 கோடி மதிப்பிலான வீட்டில் வசித்து வரும் அவர், தனது குழந்தைகளை கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்கிறார். பணம், பங்களா, மற்ற எல்லா வசதிகளும் இருந்தும் பாரத் ஜெயின் இன்னும் பிச்சை எடுப்பதை விடவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மறுத்தாலும் அவர் இந்த வேலையை கைவிடவில்லை. ஆனால் அவர் அவர்களின் ஆலோசனையை புறக்கணித்து பிச்சை எடுக்கும் வேலையைத் தொடர்கிறார்.

வீடு, கடை, சொத்து என ரூ.7.5 கோடிக்கு அதிபதி

மேலும், தானேயில் இரண்டு கடைகளை வைத்துள்ளார். கடைகளில் வாடகையாக மாதம் ரூ.30,000 சம்பாதிக்கிறார். அவருடைய குடும்பம் ஒரு ஸ்டேஷனரி கடையை நடத்துகிறது, அதில் இருந்து அவர்கள் ஒரு அழகான தொகையையும் சம்பாதிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, பாரத் ஜெயின் நிகர மதிப்பு ரூ.7.5 கோடி என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் ஆசாத் மைதானம் பகுதிகளில் பிச்சை எடுப்பது வழக்கம்.

இந்தியாவில் வசிக்கும் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள்

பாரத் ஜெயின் மட்டுமல்ல; இந்தியாவில் பல கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

1. கொல்கத்தாவைச் சேர்ந்த லட்சுமி, தனது 16 வது வயதில் இருந்து பிச்சை எடுக்கும் வேலை செய்து வருகிறார். பிச்சை எடுத்து லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளார்.

2. சாம்பாஜி காலே தினமும் ரூ.1000 பிச்சை எடுத்தே சம்பாதிக்கிறார் இவரது மாத வருமானம் ரூ.35000 அதுமட்டுமல்ல இவர் ரூ.1.5 லட்ச ரூபாய் பேங்க் பேலன்ஸ் வைத்திருக்கிறார்.

3. கிருஷ்ணகுமார் கீதே பிச்சை எடுத்தே ரூ.1500 சம்பாதிக்கிறார், இவருக்கு சொந்தமாக மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் வீடு கூட உள்ளது. அத்துடன் ரூ.5 லட்சம் தனது வங்கி கணக்கில் சேமிப்பாக வைத்துள்ளார்.

4. சரவைதா தேவி எனும் நபர், மாதம் ரூ.50000 பிச்சை எடுத்து சம்பாதிக்கிறார். இவரது பெயரில் ரூ.4 லட்ச ரூபாய்க்கு 2 இன்சூரன்ஸ் பாலிஸிகள் உள்ளன.

5. இதேபோல் மும்பையை சேர்ந்த கீதா சார்னி சாலையில் பிச்சை எடுக்கிறார். அவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் உள்ளது, அங்கு அவர் தன் சகோதரனுடன் வசிக்கிறாள். கீதா பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,500 சம்பாதிக்கிறார்.

பாருங்களேன் நாம் மாதம் ரூ.10,000 சம்பாதிப்பதற்கு திண்டாடுகிறோம், இதே நாட்டில் பிச்சை எடுத்து கோடீஸ்வரர்களும் ஆகின்றனர். இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

    Read more about: mumbai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+