Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் நேப்பியர் பாலம் செஸ் போர்டு போல வண்ணம் தீட்டப்பட்டுள்ளது – காரணம் இங்கே!

சென்னையின் நேப்பியர் பாலம் செஸ் போர்டு போல வண்ணம் தீட்டப்பட்டுள்ளது – காரணம் இங்கே!

2022 ஆண்டிற்கான, எஃப்.ஐ.டி.இ செஸ் ஒலிம்பியாட், தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் இந்தியா சார்பில் நடத்தப்படுகிறது. மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் முக்கிய நிகழ்வான இந்த ஒலிம்பியாட்டில் 2000 க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்பார்கள்.

மேலும், 100 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்த வருடம் நடத்துகிறது. அதனாலேயே எங்கு பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட் பற்றிய செய்திகள் தான் வந்த வண்ணம் உள்ளன.

எங்கு பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட்

எங்கு பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒலிம்பியாட் நிகழ்வை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு போன்று வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் செஸ் ஒலிம்பியாட்

இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் செஸ் ஒலிம்பியாட்

இந்தியாவின் செஸ் கேபிடல் என்று அழைக்கப்படும் சென்னை, ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எசெக்ஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 44வது பதிப்பை விரைவில் நடத்த உள்ளது. 100 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்பட உள்ள இந்த போட்டி ஜூலை 28 ஆம் தேதி மகாபலிபுரத்தில் தொடங்க உள்ளது.இந்த நிகழ்வை முன்னிட்டு, தலைநகரில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு போல வர்ணம் பூசப்பட்டு இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது! பாலத்தின் அமைப்பு எந்த ஒரு கலை படைப்புக்கும் குறைவானதாக இல்லை என்பதை மட்டும் மக்கள் ஒப்புக் கொள்ளுகின்றனர்.

சென்னை நேப்பியர் பாலம்

சென்னை நேப்பியர் பாலம்

சென்னையில் உள்ள கம்பீரமான நேப்பியர் பாலம் எப்போதும் அழகான விளக்குகள் மற்றும் தீம்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது வழக்கம். செஸ் ஒலிம்பியாட்டை பிரபலப்படுத்தும் பொருட்டு நேப்பியர் பாலம் செஸ் போர்டு போன்று வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கருப்பு-வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பாலத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, நாளடைவில் வைரலாகி வருகிறது.

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் பாலத்தின் வீடியோவை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு அவரது ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்து, "இந்தியாவின் செஸ் கேப்பிடல் 2022 ஆம் ஆண்டிற்கான பிரமாண்டமான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த சென்னை தயாராக உள்ளது. சின்னமான நேப்பியர் பாலம் செஸ் போர்டு போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.

அந்த சாலையில் செல்லும் மக்களின் கவனத்தையும் நெட்டிசன்களின் கவனத்தையும் இது வெகுவாக ஈர்த்துள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பாலத்தை பார்வைட்டு, செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Read more about: napier bridge chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X