Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் வொண்டர்லா தீம் பார்க்...இந்தியாவிலேயே பெரிசு...எப்போ திறக்குறாங்க தெரியுமா?

சென்னையில் வொண்டர்லா தீம் பார்க்...இந்தியாவிலேயே பெரிசு...எப்போ திறக்குறாங்க தெரியுமா?

சென்னையில் வொண்டர்லா தீம் பார்க் அமைய உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கும். இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பூங்கா சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறைக்கு முன்பாக இந்த ஆண்டு இறுதியில் இந்த தீம் பார்க்க திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாகவும், திரில்லிங்கான அனுபவத்தையும் பெறலாம்.

Wonderla Theme Park

வொண்டர்லா தீம் பார்க் :

பொழுதுபோக்கு பூங்காக்கள் இப்போது முக்கியமான சந்தையாக வளர்ந்துள்ளன. வெளிநாடுகளில் இருப்பது போல, இந்தியாவிலும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வரவேற்பு உள்ளது. வொண்டர்லா தீம் பார்க் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், புவனேஸ்வர் போன்ற நகரங்களில் வொண்டர்லா பூங்காக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் வொண்டர்லா இல்லாததால், நிறைய பேர் பெங்களூருக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், வொண்டர்லா தீம் பார்க் தமிழ்நாட்டில் அமைக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. சில காரணங்களால் பணிகள் தாமதமானது. பிறகு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தன. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை, தீம் பார்க் அமைக்கும் நிறுவனங்களுக்கு "ஒற்றை சாளர முறைப்படி (Single Window System)" அனுமதி வழங்கும் என்று அறிவித்தது. அதாவது, ஒரே இடத்தில் எல்லா அனுமதியும் கிடைக்கும். டிஸ்னி, யூனிவர்சல் ஸ்டுடியோ போன்ற பெரிய பூங்காக்களை சென்னை புறநகரில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வொண்டர்லா நிறுவனம் தனது 5-வது கிளையை தமிழ்நாட்டில் தொடங்குகிறது. இது சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பக்கத்தில் உள்ள இள்ளளூரில் 62 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக 510 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த பூங்கா குழந்தைகள், இளைஞர்கள் என எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும்.

இந்த பூங்காவில் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைய உள்ளது. வொண்டர்லா பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard நிறுவனத்தின் ரோலர் கோஸ்டர் நிறுவப்பட உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்து, எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. லண்டன், நியூயார்க் நகரங்களில் இருப்பது போன்ற ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைய உள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் அமைக்க 80 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பூங்காவில் முக்கியமான ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மற்ற விளையாட்டு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தும் பணிகள் நடக்கின்றன. முடிந்த வேலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி கொடுத்து வருகின்றனர். வேலைகள் வேகமாக நடப்பதால், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறைக்கு முன்பே பூங்கா திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஒற்றை சாளர முறைப்படி (Single Window System)" என்றால் என்ன?

பொதுவாக ஒரு தொழில் தொடங்க நிறைய அனுமதிகள் வாங்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் சென்று அனுமதி வாங்க அதிக நேரம் ஆகும். ஆனால், ஒற்றை சாளர முறையில் எல்லா துறைகளின் அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருப்பார்கள். இதனால், ஒரே இடத்தில் எல்லா அனுமதிகளையும் எளிதாகப் பெறலாம்.

வொண்டர்லா பூங்கா எப்போது திறக்கப்படும்?

வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு முன்பாக திறக்கப்படலாம்.

இந்த பூங்காவில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கும்?

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகள் நிறைய இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் இங்கு தான் உள்ளது. இந்த பூங்கா திறக்கப்பட்டால், தமிழ்நாட்டு மக்கள் பெங்களூரு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சென்னயிலேயே வொண்டர்லா அனுபவத்தை பெறலாம்.

More News

    Read more about: chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+