Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை கடற்கரைக்கும் எழும்பூருக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதை ரெடி – சோதனை ஓட்டம் வெற்றி!

சென்னை கடற்கரைக்கும் எழும்பூருக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதை ரெடி – சோதனை ஓட்டம் வெற்றி!

சென்னையின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான நெரிசலைக் குறைக்க சென்னை கடற்கரைக்கும் எழும்பூருக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதை அவசியம். தற்போது, இந்தப் பிரிவு புறநகர், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் கலவையைக் கையாள்கிறது, இதனால் அடிக்கடி தாமதங்கள் மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால் இரு நிலையங்களுக்கும் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இந்த பாதையில் ரயில் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் செய்யப்பட்டது!

Railway track

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதை

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே நான்காவது பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. சென்னை கடற்கரை மற்றும் கடற்கரை இடையே இரண்டு பாதைகள் உள்ள நிலையில் புறநகர் ரயில்கள் சென்று வருகின்றனர். ஒரு பாதையில் விரைவு ரயில்களும் மற்றொரு பாதையில் சரக்கு ரயில்கள் சென்று வருவதினால் பல நேரங்களில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய பாதை அமைக்க கோரிக்கை எழுந்து வந்தது.

அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி

எழும்பூர் கடற்கரை வரை நான்காவது பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கிய பின்னர், 274 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4 ஆவது பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இப்பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். அத்துடன், மேல்நிலை மின் கம்பிகளை ஆய்வு செய்தனர். இச்சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Railway track

நூறு சதவீத பணிகள் நிறைவு

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4 கி.மீ. தொலைவுக்கு 4 ஆவது பாதை அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பணி தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, தேவையான நிலத்தை பெற்று, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அண்மையில், இப்பாதையில் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. இதனால் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

கூடிய விரைவில் ரயில்கள் இயக்கப்படும்

தண்டவாளம் சிக்னல் அமைப்பு மற்றும் மின்சாதனம் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நூறு சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடற்கரை இடையே நான்காவது பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து அதனால் மின் மயக்கமாக்கப்பட்ட அகலப்பாதை எனவும் கூறப்படுகின்றது. கூடிய விரைவில் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+