Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா – முதலிடத்தில் இந்த நாடா?

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா – முதலிடத்தில் இந்த நாடா?

அரசியல் செல்வாக்கு, பொருளாதார வளங்கள் மற்றும் இராணுவ வலிமை ஆகியவற்றை வைத்து 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய சக்தி தரவரிசையில், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை உலகின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் சக்திவாய்ந்த நாடுகளாக தங்கள் நிகரற்ற நிலைகளைத் தக்கவைத்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவின் இடம் சற்று ஆச்சர்யம் அளிக்கிறது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல்

ஒவ்வொரு நாட்டின் அதிகாரமும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு, சர்வதேச கூட்டணிகளில் வலிமை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் இராணுவ சக்தி உட்பட பல அம்சங்கள் நாட்டின் சக்தியை நிர்ணயிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் US செய்திகளால் பின்வரும் வழிமுறையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

1

சக்தி வாய்ந்த நாடுகளை நிர்ணயிக்கும் காரணிகள்

அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார செல்வாக்கு, பாதுகாப்பு பட்ஜெட், ஆயுதம், உலகளாவிய கூட்டணிகள், மென்மையான சக்தி மற்றும் இராணுவ வலிமை. அதிகாரம் என்பது ஒரு நாட்டின் அரசியல் வலிமை அல்லது வலுவான ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று சிலர் வாதிட்டாலும், இந்தப் பண்புகளே நாடுகளைத் தனித்து நிற்க வைக்கின்றன.

முதலிடத்தில் அமெரிக்கா

2023 ஆம் ஆண்டிற்கான அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது என்பது எவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தாது. உலகளவில் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் முதன்மை உற்பத்தியாளராக அமெரிக்கா தன்னை நிலை நிறுத்தியுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேட்டோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்குள் தனக்கான முக்கியத்துவத்தை பிடித்து, அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

3

இரண்டாம் இடத்தில் சீனா

ஆய்வின்படி, நிலப்பரப்பு மற்றும் பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக சீனா உள்ளது. சீனா அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. மிகப்பெரிய பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவம் ஆகியவை சீனாவை இரண்டாம் இடத்தில் நிற்க வைத்துள்ளது.

மூன்றாம் இடத்தில் ரஷ்யா

பிப்ரவரி 2022 இல் தொடங்கப்பட்ட உக்ரைன் மீதான படையெடுப்பில் போராடிய போதிலும், ரஷ்யா அமெரிக்க செய்தி அதிகார தரவரிசையில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் உற்பத்தி போன்ற ரஷ்யாவின் பெரிய தொழில்கள், அத்துடன் நாட்டின் முக்கிய ஆயுத ஏற்றுமதியாளராக ரஷ்யா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

2

அடுத்தடுத்த இடத்தில் ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்

ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த நாடுகள் யாவும் பொருளாதாரம், ராணுவம், ஏற்றுமதி, அண்டை நாடுகள் உயர்வு ஆகியவற்றில் மேம்பட்ட இடங்களை பிடித்துள்ளன.

பனிரெண்டாம் இடத்தில் இந்தியா

வேகமாக வளர்ந்து வரும், பன்முகப் பொருளாதாரம், பெரிய, திறமையான பணியாளர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 12 ஆம் இடத்தை பிடித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைகள், கார்ப்பரேட் அவுட்சோர்சிங் சேவைகள் மற்றும் மென்பொருள், ஏற்றுமதி, ராணுவம், அண்டை நாட்டு உறவுகள், உலகாளவிய செல்வாக்கு என இந்தியா உலக அளவில் செல்வாக்குடன் நிற்கிறது.

More News

    Read more about: travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+