நாம் ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வதற்கு முன்னர் அந்த இடத்தின் சுற்றுலாத் தலங்கள், பொழுதுபோக்குகள், வசதிகள், பாதுகாப்பு, ஹோட்டல்கள், வானிலை குறித்து நிச்சயம் கூகிளில் (Google search) தேடி பார்ப்போம். அந்த பட்டியலில் மாலத்தீவுக்கு அடுத்தபடியாக இந்தியாவை பற்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தேடி பார்த்துள்ளனர்! இந்தியாவின்அழகிய சுற்றுலாத் தலங்கள் என்னென்ன, எப்போது செல்ல வேண்டும், வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு குறித்து பல தேடல்கள் செய்யப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தியா
பல வெளிநாட்டினருக்கு இந்தியா உலகின் மிகவும் வண்ணமயமான நாடாக ஒவ்வொரு ஆண்டும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கலாச்சார, பாரம்பரியமான, ஆன்மீகம் சுற்றுலாத் தலங்களோடு பல அழகிய இயற்கை சுற்றுலாத் தலங்களையும் இந்தியா கொண்டுள்ளது. உறைந்த இமயமலை, செழிப்பான பச்சை வயல், பழங்கால கோவில்கள், காலத்தை கடந்த அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், குளிர்ந்த மலைவாசஸ்தலங்கள்,மயக்கும் கடற்கரைகள் என இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அடுக்கிகொண்டே போகலாம்.

அதிகம் தேடப்பட்ட நாடுகளில் இந்தியா 2ஆவது இடம்
பவுன்ஸ் ஏஜென்சி நடத்திய ஆய்வின்படி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாக மாலத்தீவு உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் நமது இந்தியா இருக்கிறது. பகிரப்பட்ட தரவு ஒரு வருட காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டது. மாலத்தீவுகள் 2,457,000 கூகுள் தேடல்களுடன் முதலிடத்திலும், இந்தியா 1,478,300 மொத்த தேடல்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
வெளிநாட்டவர்கள் விரும்பி ரசித்த இந்திய சுற்றுலாத் தலங்கள்
1. மகாபலிபுரம், தமிழ்நாடு
2. தாஜ்மஹால், ஆக்ரா
3. ஆக்ரா கோட்டை, டெல்லி
4. குதுப்மினார், டெல்லி
5. வாரணாசி, உத்தரப்பிரதேசம்
6. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
7. கடற்கரைகள், தேவாலயங்கள், கோவா
8. ஜோத்பூர், ராஜஸ்தான்
9. ஹம்பி, கர்நாடகா
10. மதுரை, தமிழ்நாடு
11. புதுச்சேரி
12. ஜெய்சால்மர், ராஜஸ்தான்
13. ஆலப்புழா, கேரளா
14. லடாக்
15. சிக்கிம்
16. சிம்லா, இமாச்சலப் பிரதேசம்
17. மும்பை, மகாராஷ்டிரா
18. உதய்ப்பூர், ராஜஸ்தான்
19. ரான் ஆப் கட்ச், குஜராத்
20. டார்ஜிலிங், மேற்கு வங்காளம்
அதிகம் தேடப்பட்ட நாடுகள்
1. மாலத்தீவுகள் (2,457,000 தேடல்கள்)
2. இந்தியா (1,478,300 தேடல்கள்)
3. சிங்கப்பூர் (1,224,500 தேடல்கள்)
4. கோஸ்டாரிகா (1,067,300 தேடல்கள்)
5. மெக்சிகோ (1,059,000 தேடல்கள்)
6. ஜப்பான் (1,051,200 தேடல்கள்)
7. ஜமைக்கா (1,021,900 தேடல்கள்)
8. கிரீஸ் (998,100 தேடல்கள்)
9. பஹாமாஸ் (957,000 தேடல்கள்)
10. ஆஸ்திரேலியா (867,000 தேடல்கள்)



Click it and Unblock the Notifications





