Search
  • Follow NativePlanet
Share
» »பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா? ரயில்வேயின் அசத்தல் ஆஃபர்

பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா? ரயில்வேயின் அசத்தல் ஆஃபர்

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, பிறகு பணம் செலுத்தும் புதிய முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது ரயில் பயணிகளை செம குஷியாக்கி உள்ளது.

Indian Railway

வழக்கமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணம் செய்யும் ரயில், இடம், தேதி ஆகியவற்றை தேர்வு செய்து விட்டு, பயணம் செய்பவர் பற்றிய விபரங்களை அளித்த பிறகு ரயில் டிக்கெட்டிற்கான கட்டணம் மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றின் மொத்த தொகையை செலுத்தினால் மட்டும் தான் பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டை பெற முடியும். இந்த நடைமுறை தான் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில், "Book Now,Pay Later" என்ற புதிய முறையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இப்போது ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது நீங்கள் உடனடியாக பணம் செலுத்த வேண்டாம். ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து விட்டு, அடுத்த 14 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதற்கு பிறகு பணம் செலுத்தினால் 3.5 சதவீதம் சேவை கட்டணம் வசூல் செய்யப்படும். www.epaylater.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்கள் ரயில் டிக்கெட்டிற்கான கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Train on Chenab Bridge

Pay Later சேவையை எப்படி பெறுவது?

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, பிறகு பணம் செலுத்தும் சேவையை நீங்கள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

1. முதலில் IRCTC இணையதளத்திற்கு சென்று அக்கவுண்ட் ஓபன் செய்து, அதில் Login செய்து உள்ளே செல்ல வேண்டும்.

2. Book Now என்ற பட்டனை கிளிக் செய்து, ரயிலில் பயணம் செய்பவரின் விபரங்களையும், Captche code ஆகியவற்றையும் நிரப்ப வேண்டும்.

3. இந்த விபரங்களை Submit கொடுத்த பிறகு, Payment பக்கத்திற்கு செல்லும். அங்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், பீம் ஆப் என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கும். உடனடியாக பணம் செலுத்த போகிறீர்கள் என்றால் இவற்றில் ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்து அப்போதே பணம் செலுத்தி விடலாம்.

4. ஒருவேளை நீங்கள் Pay Later வசதியை பெற வேண்டும் என்றால் www.epaylater.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.

5. முன்பதிவு செய்த பிறகு Payment method வசதியை கிளிக் செய்து, பணம் ஏதும் செலுத்தாமலேயே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

6. அதே சமயம் ரயில் டிக்கெட்டிற்கான கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தா விட்டால், கூடுதல் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு செய்து 14 நாட்களுக்கு பிறகு பணத்தை செலுத்தினால் 3.5 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். உடனடியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து ஆக வேண்டும். ஆனால் கையில் தற்போது போதுமான அளவிற்கு பணம் இல்லை. உடனடியாக டிக்கெட்டிற்கான முழு கட்டணத்தையும் செலுத்த முடியாது என்பவர்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ள இந்த முறை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

More News

    Read more about: indian railway train irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+