Search
  • Follow NativePlanet
Share
» »மலைகளுக்கு மேல் ட்ரெக்கிங் செல்ல உங்களுக்கு ஆசையா - அப்போ இதையெல்லாம் மறக்காதீங்க!

மலைகளுக்கு மேல் ட்ரெக்கிங் செல்ல உங்களுக்கு ஆசையா - அப்போ இதையெல்லாம் மறக்காதீங்க!

மலைகளோடு தொடர்புடைய ட்ரெக்கிங், மௌண்டெயினிரிங், மௌண்டெயின் பைக்கிங், ராக் கிளைம்பிங் ஆகியவை இளசுகளுக்கு மிகவும் பிடித்த சாகச செயல்களாகும். அதுவும் சமீப வருடங்களில் பனி மூடிய சிகரங்களின் மீது பயணம் செய்து உச்சியில் நின்று போட்டோ எடுத்து சாதித்து காட்டும் செயல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அப்படி மலையேற வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்திய மலையேறும் வீராங்கனையான பல்ஜீத் கவுர், நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் மலையேற்றம் செய்யும் போது காணமல் போனார், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டவசமாக கண்டுபிடிக்கபட்டார். உங்களுக்கும் இது போல நடந்து விடக் கூடாது அல்லவா? மலையேறும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி முதலில் நாம் தெரிந்துக் கொள்ளுவோம்!

baljeetkaurcover

மிகவும் சவால் நிறைந்த மலையேறுதல் (Mountaineering)

மலையேறுதல் என்பது மிகவும் தைரியம் நிறைந்த சாகசச் செயலாகும். மேலும் அதற்கு நிறைய பயிற்சி தேவை! மலை உச்சியில் ஏறுவதும், காற்றுக் குறைவான இடத்தில் தாக்கு பிடிப்பதும் மிகவும் கஷ்டமான செயல் அல்லவா! சமீபத்தில் இந்திய மலையேறும் வீராங்கனையான பல்ஜீத் கவுர், நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் ஏறும் பயணத்தை மேற்கொண்டு காணாமல் போனார். அதிர்ஷ்டவசமாக செவ்வாய்க்கிழமை காலை அவர் மீட்கப்பட்டார்.

பயனீர் அன்னபூர்ண எக்ஸ்பெடிஷன் மூலம் மீட்கப்பட்ட வீராங்கனை

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த பஜீத் கவுர் மலை ஏறுபவர். அவர் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் ஏறுவதற்காக ஒரு பயணத்திற்கு சென்றிருந்தார். இருப்பினும், மலையின் உச்சியில் ஏறும் போது, IV முகாம் அருகே அவர் காணாமல் போய்விட்டார். 'பயனீர் அன்னபூர்ண எக்ஸ்பெடிஷன்' மூலம் உயிருடன் மீட்கப்பட்டார்.

baljeetkaurcover

8,000 மீட்டர் உயரம் கொண்ட 4 சிகரங்களிலும் எரிய முதல் இந்தியர்

பால்ஜீத் கவுர், பசாங் ஷெர்பா மற்றும் காமி ஷெர்பா ஆகியோருடன் சேர்ந்து அன்னபூர்ணா I சிகரத்தை வெற்றிகரமான ஏறினர். இருப்பினும், அதற்கான பாதை எளிதானது அல்ல, அதற்காகவே மலையேறுபவர்கள் விரிவான பயிற்சி பெற்றனர். மலையில் இருந்து ஏறும் போது, பல்ஜீத் கவுர் காணாமல் போனதால், குழு வான்வழி தேடுதல் பணியை தொடங்கியது. பல முயற்சிகளுக்குப் பிறகு, காணாமல் போன மலையேறுபவரை குழு தொடர்பு கொள்ள முடிந்தது, மேலும் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். நான்கு 8,000 மீட்டர் சிகரங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஏறிய முதல் இந்தியரும் இவரே ஆவார்.

baljeetkaur

மலையேறும் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது

நீங்கள் சாகச விரும்பியாக இருந்தால் நல்லது தான். ஆனால் இது போல உங்களுக்கு நடந்து விடக்கூடாது அல்லவா!

1. பழக்கப்படுத்துதலின் போது அதிக உயரத்திலும், குறைந்த உறக்கத்திலும் வேலை செய்யுங்கள்.

2. மலை ஏறுபவர்கள் தங்கள் எடை சுமக்கும் திறனை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

3. குளிர் காற்று, கடுமையான தட்பவெப்ப நிலை மற்றும் இரவு நேரத்தில் நடப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரில் எப்போதும் லேசிக்ஸ் மாத்திரைகளை எடுத்துச் சென்று உட்கொள்ள வேண்டும்.

5. மலை ஏறுபவர்கள் மோசமான வானிலையில் இயக்கத்தை பயிற்சி செய்ய வேண்டும்.

6. முதலுதவி பெட்டியை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும்

7. எலக்ட்ரோல்/குளுக்கோஸ் மற்றும் உப்பு எடுத்துச் செல்ல வேண்டும்.

8. சன்ஸ்கிரீன் லோஷன் மற்றும் லிப் சால்வ் பயன்படுத்தவும்.

baljeetkaurcover

இவற்றையெல்லாம் செய்யவே கூடாது

1. ஒருபோதும் பாதையை விட்டு வெளியேற வேண்டாம்

2. சத்தமாக இசையை ஒலிக்க செய்து காட்டு விலங்குகளை உங்கள் பக்கம் அழைக்க வேண்டாம்.

3. அதே நேரத்தில் நடக்கும்போது ஹெட்ஃபோன்களை அணிய வேண்டாம், உங்களுடன் வருபவர்களின் குரல் உங்களுக்கு கேக்காமல் போகலாம்.

4. காட்டில் கிடைக்கும் காய்கள் மற்றும் பழங்களை உண்ணாதீர்கள்

5. ஒருபோதும் குப்பை போடாதீர்கள்.

6. ஓடைக்கு அருகில் செல்ல வேண்டாம்.

7. ஏறும் போது வேகமாக ஓடவோ நடக்கவோ கூடாது.

8. வெறும் வயிற்றில் நடக்க வேண்டாம்

9. எந்த மருத்துவ அசௌகரியத்தையும் புறக்கணிக்காதீர்கள், அது எவ்வளவு சிறியதாக தோன்றினாலும்.

இப்படியெல்லாம் கவனத்துடன் சென்றால் நீங்கள் பத்திரமாக சென்று பத்திரமாக வீடு திரும்புவீர்கள்!

More News

    Read more about: nepal adventure
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+