Search
  • Follow NativePlanet
Share
» »நவராத்திரியை முன்னிட்டு IRCTC அறிமுகப்படுத்திய சிறப்பு வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜ்!

நவராத்திரியை முன்னிட்டு IRCTC அறிமுகப்படுத்திய சிறப்பு வைஷ்ணோ தேவி டூர் பேக்கேஜ்!

நவராத்திரியைக் கொண்டாட இந்தியா தயாராகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் நவராத்திரி விழா பல வண்ணங்களில் களைகட்டும். அதன் ஒரு பகுதியாக, மாதா வைஷ்ணோ தேவி, கத்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான நவராத்திரி சிறப்பு சுற்றுலா ரயில்' செப்டம்பர் 30 ஆம் தேதி பாரத் கௌரவ் ரேக்கின் கீழ் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது.

ஜூன் 2022 இல் IRCTC ஆல் இயக்கப்பட்ட ராமாயண சர்க்யூட் மாபெரும் வெற்றியடைந்ததையொட்டி இப்போது நவராத்திரியை முன்னிட்டு மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிற்கு நவராத்திரி சிறப்பு சுற்றுலா ரயிலை புதிதாக அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்கள் கொண்ட இந்த பயணம் செப்டம்பர் 30, 2022 அன்று கத்ராவிற்கு தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

irctclaunches

டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலில் டெல்லி, காசியாபாத், மீரட், முசாபர்நகர், சஹாரன்பூர், அம்பாலா, சிர்ஹிந்த், லூதியானா ஆகிய இடங்களில் பயணிகள் ஏறிக் கொள்ளலாம். இந்த ரயிலில் 600 சுற்றுலாப் பயணிகள் செல்லும் அளவில் 11 பிரத்யேக 3 அடுக்கு ஏசி பெட்டிகள் உள்ளன.

பாரத் கௌரவ் ரயிலுக்குள் சிசிடிவி கேமராக்கள், பேண்ட்ரி கார்கள், பாதுகாவலர்கள் மற்றும் பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயிலின் உட்புறம் பண்டைய இந்திய நூல்களை அடிப்படையாகக் கொண்ட கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் தங்கள் பயணத்தின் போது பண்டிகை உணர்வை பெறும் வகையில் ரயில் உள்ளேயும் வெளியேயும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.சலுகையைப் பற்றி மேலும் வெளிப்படுத்திய IRCTC இன் அதிகாரி ஒருவர், 3 அடுக்கு ஏசியில் பயணம், பேருந்துகளில் சுற்றிப் பார்ப்பது, ஏசி ஹோட்டல்களில் இரவு தங்குவது, அனைத்து உணவுகள், பயணக் காப்பீடு மற்றும் வழிகாட்டி சேவைகள் ஆகிய அனைத்தையும் இந்த பேக்கேஜ் உள்ளடக்கியது என்று கூறினார். தேவையான அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கவனிக்கப்படும் மற்றும் பணியாளர்கள் முழுமையாக பரிசோதிக்கப்படுவார்கள், அதேசமயம் ஒவ்வொரு உணவு சேவைக்குப் பிறகும் சமையலறை சுத்தம் செய்யப்படும் என்றும் கூறினார்.

நவராத்திரி சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் விலை சிங்கிள் ஷேரிங்கில் ரூ. 13,790, டபுள் ஷேரிங்கில் ரூ. 11,990 மற்றும் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ. 10,795 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை நீங்கள் Paytm மற்றும் Razorpay பேமெண்ட் கேட்வேகளுடன் இணைந்து சிறிய அளவிலான EMIகளில் புக் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் பேக்கேஜைப் பெற, பயணிகள் IRCTC இணையதளத்தில் விரிவான தகவல்களைப் பெறலாம் மற்றும் மண்டல அலுவலகங்களில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், முதலில் வருபவருகே முன்னுரிமை, ஆதலால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X