Search
  • Follow NativePlanet
Share
» »IRCTC இன் அட்டகாசமான “ஸ்ரீ ராமாயண யாத்ரா” டூர் பேக்கேஜ் – மிஸ் பண்ணக்கூடாத ட்ரிப்!

IRCTC இன் அட்டகாசமான “ஸ்ரீ ராமாயண யாத்ரா” டூர் பேக்கேஜ் – மிஸ் பண்ணக்கூடாத ட்ரிப்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஒரு அசத்தலான யாத்ரீக சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. ராமர் பக்தர்களை அவரது வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்துச் செல்வதே இந்த சொகுசு ரயில் சர்க்யூட்டின் நோக்கமாகும்.

இந்த காவிய பயணம் டெல்லியில் இருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்குகிறது. அதனைப் பற்றிய இதர முக்கிய தகவல்கள் இதோ!

ராமாயன் யாத்ரா 2022

ராமாயன் யாத்ரா 2022

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக IRCTC ஜூன் 2022 இல் செய்த முயற்சி மாபெரும் வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதத்திலும் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் சில மாற்றங்களுடன் மீண்டும் இந்த யாத்ரீக ரயில் தொடங்கப்பட உள்ளது.

புது தில்லியின் சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராச்சலம் உள்ளிட்ட ராமர் தொடர்பான அனைத்து முக்கிய இடங்களையும் உள்ளடக்குகிறது. டெல்லியின் சப்தர்ஜங், துண்ட்லா, காசியாபாத், அலிகார், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயிலில் ஏறிக் கொள்ளலாம்.

இந்த முழு குளிரூட்டப்பட்ட சுற்றுலா ரயிலில் பதினொரு 3வது ஏசி பெட்டிகள், ஒரு பேண்ட்ரி கார் மற்றும் இரண்டு எஸ்எல்ஆர் பெட்டிகள் இருக்கும். புதிதாக சமைத்த சைவ உணவுகள்நன்கு பொருத்தப்பட்ட பேண்ட்ரி காரில் இருந்து விருந்தினர்களுக்கு அந்தந்த இருக்கைகளில் வழங்கப்படும். ரயிலில் பயணிகளின் பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவிப்புகளுக்காக இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பும்
பொருத்தப்பட்டுள்ளது. தூய்மையான கழிவறைகள் முதல் சிசிடிவி கேமராக்கள் வரை அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

ராமாயண வழித்தடங்கள்

ராமாயண வழித்தடங்கள்

· டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கும் இந்த பயணத்தின் முதல் நிறுத்தம் ராமர் பிறந்த இடமான அயோத்தி தான்.

· இங்கு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ ராம் ஜென்பூமி கோயில் மற்றும் அனுமான் கோயில் மற்றும் நந்திகிராமில் உள்ள பாரத் மந்திர் ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள். அயோத்தியிலிருந்து இந்த ரயில் நேபாளத்தின் ஜெய்நகர் வழியாக ஜனக்பூருக்கு செல்கிறது. சுற்றுலாப் பயணிகள் ஜனக்பூரில் உள்ள ஹோட்டல்களில் இரவு தங்கி, ஜனக்பூரில் உள்ள புகழ்பெற்ற ஜானகி கோயில் மற்றும் ராம்-ஜானகி திருமண இடத்திற்குச் செல்வார்கள்.

· மேலும், சுற்றுலாப் பயணிகள் சீதாவின் பிறந்த இடத்தைப் பார்ப்பதற்காக சீதாமர்ஹிக்குச் செல்கிறார்கள், அங்கு சீதாமர்ஹியில் இருந்து பக்ஸருக்கு ரயில் சென்ற பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கு மகரிஷி விஸ்வாமித்திரரின் துறவு மற்றும் ராம்ரேகா காட் ஆகியவை காண்பிக்கப்படும், அங்கு விருந்தினர்கள் கங்கையில் புனித நீராடலாம்.

· பக்ஸருக்குப் பிறகு, அடுத்த இலக்கு உலகின் மிகப் பழமையான நகரமான வாரணாசிக்கு செல்வார்கள். காசியில் இருக்கும் போது, சுற்றுலாப் பயணிகள் வாரணாசி சீதா சமாஹித் ஸ்தல், பிரயாக், ஷ்ரிங்வர்பூர் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை பார்வையிடுவார்கள். வாரணாசி, பிரயாக் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்களில் இரவு தங்கும் வசதி வழங்கப்படும்.

· அடுத்த கட்டத்தில் இரயில் பயணம் நாசிக் நோக்கி நகர்கிறது. த்ரயம்பகேஷ்வர் கோயில் மற்றும் பஞ்சவடி ஆகிய இடங்களுக்குச் செல்வது உள்ளடக்கப்படும்.

· இங்கு விருந்தினர்கள் ஆஞ்சநேயத்ரி மலைகள் மற்றும் பிற பாரம்பரிய மற்றும் மதத் தலங்களில் உள்ள ஸ்ரீ ஹனுமான் பிறந்த இடமாக நம்பப்படும் கோயிலுக்குச் செல்வார்கள்.

· இந்த ரயில் பயணத்தின் அடுத்த இடம் ராமேஸ்வரம் ஆகும், இதில் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி ஆகியவை அடங்கும். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் செல்வார்கள், அங்கு சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி மற்றும் காமக்ஷி கோயில்களைப் பார்வையிடுவார்கள்.

· இங்கிருந்து, இந்த சுற்றுப்பயணத்தில் ரயில் தொடும் கடைசி இலக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராசலம் ஆகும், இது தெற்கின் அயோத்தி என்றும் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்குப் பிறகு, இந்த முழு ராமாயண சுற்றுப்பயணத்தை அதாவது சுமார் 8000 கிலோமீட்டர் தூரத்தை 20 வது நாளில் டெல்லிக்குத் திரும்பி பயணிகள் நிறைவு செய்வார்கள்.

கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள்

கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள்

ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை 19 இரவுகள் மற்றும் 20 நாட்களுக்கு நீடிக்கிறது. கம்ஃபோர்ட் வகுப்பில் தனி நபருக்கான கட்டணம் ரூ. 84,000 ஆகவும், டபுள் மற்றும் ட்ரிபிள் பிரிவில் ரூ. 73,500 ஆகவும், வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ரூ. 67,200 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இதுவே சுப்பீரியர் வகுப்பில் தனி நபருக்கான கட்டணம் ரூ. 95,500 ஆகவும், டபுள் மற்றும் ட்ரிபிள் பிரிவில் ரூ. 84,000 ஆகவும், வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ரூ. 77,700 ஆகவும் வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு நீங்கள் www.irctctourism.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம், மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 8287930202 மற்றும் 8287930297 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X