வசீகரமான பள்ளத்தாக்குகள் முதல் அடிவானம் வரை பரந்து விரிந்து கிடக்கும் ஆல்பைன் புல்வெளிகள் வரை, காஷ்மீரில் பார்க்க வேண்டிய இந்த இடங்கள் அவற்றின் உயர்ந்த அழகுக்காக அறியப்படுகின்றன.
பிர் பஞ்சால் மலைகளின் மடியில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாநிலம், நாட்டிலேயே மிக அழகிய இடங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் சில அச்சுறுத்தல்கள் காரணமாக நாம் காஷ்மீர் பயணத்தை சற்று யோசித்தே திட்டமிடுகிறோம்.

இங்கு எப்போது வேணாலும் தடை உத்தரவு பிறப்பிக்கப் படலாம், ஒரு சில சுற்றுலாப் பகுதிகளை தவிர்த்து, நாமும் இங்கு வேறு எங்கும் சென்றிட முடியாது. அது போல தான், இப்பகுதியில் 1990 இல் தீவிரவாதம் அதிகரித்ததால் காஷ்மீரில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டன. அப்போது மூடப்பட்ட திரையரங்குகள் முப்பது வருடங்கள் கழித்து இப்போது தான் திறக்கப்பட உள்ளன.
1999 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஃபரூக் அப்துல்லா திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரொக்க மானியம் அறிவித்தபோது, யூனியன் பிரதேசத்தில் திரைப்படத் துறையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீலம், ரீகல் மற்றும் பிராட்வே போன்ற திரையரங்குகள் திறக்கப்பட்டன, ஆனால் ரீகல் மற்றும் நீலம் திரையரங்குகளுக்குள் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால் அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையின் மறுபுறத்தில் இருந்து நீண்ட காலமாக பயங்கரவாதத்தைக் கண்ட காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 2020 இல், ஸ்ரீநகரில் மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர் அமைப்பதற்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஒளிப்பதிவு சட்டம்-1952ன் கீழ் இந்த அனுமதி வழங்கியது.
இதற்கு பிறகு பலரும் காஷ்மீரில் திரையரங்குகள் திறக்க முயற்சி செய்தனர். அதன்படி INOX திட்ட மேலாளர் விசாக் "நாங்கள் காஷ்மீரில் INOX இன் முதல் மல்டிபிளெக்ஸைத் தொடங்குகிறோம். மூன்று ஆடிட்டோரியங்களில் சமீபத்திய ஒலி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. வெள்ளித் திரை பயன்படுத்தப்படுகிறது. சாய்வு இருக்கைகள் மற்றும் சாதாரண நாற்காலிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.
"30 ஆண்டுகளாக இங்கு அப்படி எதுவும் இல்லை என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம், ஏன் இல்லை என்று நாங்கள் நினைத்தோம்? எனவே நாங்கள் அதை தொடங்க முடிவு பண்ணினோம். இளைஞர்கள் ஜம்முவிலோ அல்லது நாட்டின் பிற நகரங்களிலோ சினிமாவில் கிடைக்கும் அதே வசதிகளை இங்கும் பெற்று மகிழ வேண்டும்." என்றும் அவர் கூறினார்.

சுமார் 520 பேர் தங்கக்கூடிய திறனில் இந்த மல்டிப்ளெக்ஸ் எழுப்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸில் உணவு விடுதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் இருக்கும், இது குழந்தைகளை ஈர்க்கும் இடமாக நிச்சயம் இருக்கும். விரைவில் பணிகளை முடிக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஆகவே, இனி நீங்கள் ஸ்ரீநகருக்கு செல்லும் போது அந்த பனி உலகத்தை ஆராய்ந்த பிறகு அங்கு திரைப்படங்களையும் கண்டு மகிழலாம்.



Click it and Unblock the Notifications





