Search
  • Follow NativePlanet
Share
» »வண்ணமயமான அஹர்பால் திருவிழாவில் கலந்துக் கொள்ள இப்போதே திட்டமிடுங்கள்!

வண்ணமயமான அஹர்பால் திருவிழாவில் கலந்துக் கொள்ள இப்போதே திட்டமிடுங்கள்!

இந்தியாவின் பல பகுதிகளின் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரின் பக்கெட் லிஸ்டிலும் இருக்கும் ஒரு இடம் தான் காஷ்மீர். இயற்கை அன்னை இந்தியாவை நன்கு ஆசீர்வதித்து இருந்தாலும் கூட, அவளின் செல்லப் பிள்ளை என்னவோ காஷ்மீர் தான் என்பதை நாம் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே தெரிந்துக் கொள்வோம்!

பனி மூடிய சிகரங்கள், வெள்ளிப் போன்ற நீர்வீழ்ச்சிகள், பால் போன்று ஓடுகின்ற ஆறுகள், மின்னுகின்ற பள்ளத்தாக்குகள், வண்ணமயமான ஏரிகள் என காஷ்மீரில் இயற்கை அதிசயங்கள் கொட்டி கிடக்கின்றன. இருப்பினும், சீதோஷண நிலை மற்றும் பட்ஜெட் காரணமாக மற்ற மாநிலங்களைப் போல் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் காண்பது இல்லை.

kashmir-u2019saharbalfestival1-1663128909.jpg -Properties

உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் அஹர்பால் நீர்வீழ்ச்சி அருகே, குல்காம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறையுடன் இணைந்து, இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் சமீபத்தில் அஹர்பால் திருவிழாவை தொடங்கியுள்ளது.

இந்த கோடை காலத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரை எப்போதும் ஈர்க்க தவறுவது இல்லை. அஹர்பால் போன்ற தனித்துவமான சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திருவிழா அல்லது மேளா என்பது ஜம்மு & காஷ்மீர் முழுவதும் இந்த ஆஃப்பீட் ஸ்தலத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இதனைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்த இந்த திருவிழா உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ஆண்டு திருவிழாவில் விவசாயம், தோட்டக்கலை, செம்மறி ஆடுகள், கால்நடை பராமரிப்பு, சுற்றுலா, தேனீ வளர்ப்பு, மலர் வளர்ப்பு மற்றும் காஷ்மீரின் உள்ளூர் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளால் பல ஸ்டால்கள் அமைக்கப்பட்டன.

மேலும், குழந்தைகளை ஈடுபடுத்தும் வகையில், அஹர்பால் விழாவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனுடன்,

சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மலையேற்றம் போன்ற நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன, அவற்றை குல்காமின் துணை ஆணையர் டாக்டர் பிலால் மொஹி-உத்-தின் பட் கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் காஷ்மீருக்கு அருகில் இருந்தாலோ அல்லது காஷ்மீரில் இருந்தாலோ இந்த திருவிழாவில் கலந்துக் கொண்டு பாரம்பரியத்தில் மூழ்கி திளைத்திடுங்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X