Search
  • Follow NativePlanet
Share
» »மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு இனி க்ருஸ் வழியாக பயணிக்கலாம்!

மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு இனி க்ருஸ் வழியாக பயணிக்கலாம்!

இந்தியாவில் க்ருஸ் எனப்படும் கப்பலில் சுற்றுலா செல்வது மெது மெதுவாக வளர்ந்து வருகிறது. க்ருஸ் சுற்றுலா செல்ல நாம் கோவாவிற்கு தான் பயணிக்க வேண்டும் என்றில்லை. ஏனென்றால் எல்லா இடங்களிலும் க்ருஸ் சுற்றுலா இப்போது மேலோங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு க்ருஸ் வசதி தொடங்கப்பட உள்ளது. இது அப்பகுதிக்கு வருபவர்களையும், ஆக்ராவிற்கு வருபவர்களையும் பரவலாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mathuratovrindhavancruise1-1661404607.jpg

உத்திரபிரதேச மாநிலம் சுற்றுலாவைப் பொறுத்தவரை மேலும் ஒரு ஊக்கத்தைப் பெற உள்ளது. சித்ரகூடில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட டேபிள்டாப் விமான நிலையத்திற்குப் பிறகு, மதுரா மற்றும் பிருந்தாவனத்தின் புனித யாத்திரை தலங்களை இணைக்கும் கப்பல் சேவையையும் மாநிலம் பெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா

சோனோவால் வெளியிட்டுள்ளார்.

மதுரா மற்றும் பிருந்தாவனம் பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய புனிதத் தலங்களாகும். வாழ்வில் ஒரு முறையேனும் இங்கு சென்று வந்துவிட வேண்டும் என்று இந்துக்கள் பலரும் விரும்புகின்றனர். இது இந்துக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளையும் ஈர்க்கக்கூடிய சர்வதேச தரம் முக்கியத்துவம் வாய்ந்த தலங்களாகும்.

mathuratovrindhavancruise2-1661404616.jpg -Properties

மதுரா மற்றும் பிருந்தாவனத்திற்கு செல்லும் பயணிகள் அந்த இடங்களுக்கு செல்வதோடு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இந்த க்ருஸ் அவர்களை ஊக்குவிக்கும். இந்த இடங்கள் ஆன்மீக ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததோடு டெல்லிக்கு அருகாமையில் இருப்பதால், இந்த சர்க்யூட் இது ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

நிருபரின் கேள்விக்கு பதிலளித்த சோனோவால், ஆக்ராவிற்கு பயணிக்கும் பார்வையாளர்களை மதுராவிற்கு வருவதற்கு இந்த க்ரூஸ் சேவை ஈர்க்கும் என்று கூறினார். யமுனையில் நீர் வழித்தடங்களை உருவாக்குவதன் மூலம் கோகுல், மதுரா மற்றும் பிருந்தாவனம் இணைக்கப்படும் என்றும் கூறினார்.

"மதுரா மற்றும் பிருந்தாவனம் இந்த இரட்டை நகரங்கள் பகவான் கிருஷ்ணரின் பிறப்பிடமாக புகழ் பெற்றுள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த இரட்டை நகரங்கள் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். மேலும் இந்த இடங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று தொலைவில் இல்லை என்பதால், ஒரு நாளில் பெரும்பாலான இடங்களை ஒருவர் கண்டுகளிக்கலாம்" என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய வளர்ச்சியின் மூலம், இந்த இடங்கள் எதிர்காலத்தில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+