Search
  • Follow NativePlanet
Share
» »ராமர் பிறந்த இடமான அயோத்தி – உலகத்தர வேதிக் சிட்டியாக மாற போகிறதா?

ராமர் பிறந்த இடமான அயோத்தி – உலகத்தர வேதிக் சிட்டியாக மாற போகிறதா?

ராமர் பிறந்த இடமான அயோத்தி உலகத்தரம் வாய்ந்த ஒரு வேதிக் சிட்டியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த புகழ்பெற்ற நகரத்தின் விரிவாக்கமே 'நவ்யா அயோத்தி' என்று அழைக்கப்படுகிறது.

புதிய இரயில் பாதை நிலையம் மற்றும் உலகளாவிய விமான முனையத்தின் வளர்ச்சியிலிருந்து மிகவும் இணைக்கப்பட்ட பரந்த தெருக்கள் வரை அனைத்து ஒருங்கிணைந்து புதிய அயோத்தியை உலகளவில் பிரபலமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

navyaayodhya1-1661587516.jpg -Properties

நவ்யா அயோத்தி நிலையான வாழ்க்கைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சுற்றுச்சூழல் நட்பு வேத நகரமாக உருவாக்கப்படுகிறது. சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நவ்யா அயோத்தி இயக்கப்படும். நகரம் பசுமையான இடங்கள் மற்றும் பூங்காக்களையும் கொண்டிருக்கும், மேலும் கழிவு மேலாண்மை மற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் திட்டங்களின்படி, 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நகரமானது வாஸ்து நட்பு வேத நகரமாக உருவாக்கப்படும். புதிய நகரம் ஐந்து நாடுகளுக்கான விருந்தினர் மாளிகைகளுடன் சுமார் இரண்டு டஜன் இந்திய மாநிலங்களின் விருந்தினர் இல்லங்களையும் கொண்டிருக்கும்.

navyaayodhya2-1661587601.jpg -Properties

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியை உலகளாவிய நகரமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்குமாறு அனைத்து அதிகாரிகளையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அயோத்தியை சுற்றுச்சூழல் நட்பு நகரமாக மாற்றுவது குறித்தும் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்ல மின்னணு வாகனங்கள் இடம்பெறும். பக்தர்களுக்கு வசதியாக அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்கள் நிறுத்தம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

navyaayodhya3-1661587610.jpg -Properties

சரயு நதிக்கரையில் 200 அடி உயர ராமர் சிலையும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ராமர் சிலையை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் மியூசியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவையனைத்தும் மூலாதனமாக இருக்கும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டப்பட்டு பக்தர்கள் வருகைக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் படி 2030க்குள் 6.8 கோடிக்கும் அதிகமான மக்கள் அயோத்திக்கு வருகை தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமும் அயோத்திக்கு சென்று

    Read more about: navya ayodhya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X