Search
  • Follow NativePlanet
Share
» »1971இல் கடலுக்கடியில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் – மூழ்கிய பாகிஸ்தான் கப்பல் தற்போது கண்டுபிடிப்பு!

1971இல் கடலுக்கடியில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் – மூழ்கிய பாகிஸ்தான் கப்பல் தற்போது கண்டுபிடிப்பு!

75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவாக இருந்து வேறு நாடாக மாறிய பாகிஸ்தான் அன்று முதல் இன்று வரை ஏதோ ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவோ போர்கள், சண்டைகள், அத்துமீறல்கள், குண்டுவெடிப்புகள் இந்தியாவில் நடந்துள்ளதை நாம் அறிவோம்.

ஆனால், யாருக்கும் தெரியாமல், 1971இல் கடலுக்கடியில் ஒரு ரகசியப் போர் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தது! அதில் ஜெயித்தது என்னவோ இந்தியா தான். இன்று வரை அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் போர் கப்பலின் பாகங்களை விசாகப்பட்டினம் அருகே தற்போது இந்திய கடற்படை கண்டுபிடித்துள்ளது!

1971இல் கடலுக்கடியில் இந்தியா பாகிஸ்தான் போர்

நீங்கள் பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராணா டக்குபாட்டி நடித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த காஸி அட்டாக் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்த கதை சுலபமாக புரியும். அந்த திரைப்படமே கடலுக்கடியில் இந்தியா பாகிஸ்தான் இடையே அரங்கேறிய போரை பற்றியது தான். 1971 இல் ரகசியமாக கடல் வழியாக வந்து விசாகப்பட்டினம் மற்றும் INS விக்ராந்த் போர் கப்பலை அழிக்க பாகிஸ்தான் நீர்மூழ்கிக்கப்பலான PNS காஸி பாகிஸ்தானில் இருந்து கிளம்பியது.

PNS ghazi wreck found by Indian Navy

பதிலடி கொடுக்க தயாரான INS ராஜ்புத்

நவம்பர் 14, 1971 அன்று பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து புறப்பட்ட PNS காஸி இந்திய தீபகற்பத்தை சுற்றி 4,800 கி.மீ தூரத்தை கடந்து விசாகப்பட்டினத்தை அடைந்தது. சத்தமில்லாமல் இந்தியாவுக்கு பேரழிவு உருவாக்க திட்டமிட்ட பாகிஸ்தானின் நோக்கத்தை தெரிந்து கொண்ட இந்தியா இதற்குப் பதிலடியாக, INS ராஜ்புத் அல்லது S21 என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக்கப்பலை அனுப்பியது.

போராடி வெற்றிக் கண்ட INS ராஜ்புத்

இவர்களின் சதி வேலைக்கு தக்க பதிலடி கொடுக்க தயாரான INS ராஜ்புத் இரண்டு இரவு கடலுக்கடியில் தங்கி பல போராட்டங்களுக்கு பிறகு பாகிஸ்தானின் நாசக்கார நீர்மூழ்கிக் கப்பலான PNS காஸியை தரை மட்டமாக்கியது. ஆனால், 1971 இல் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கவே இல்லையென்றும், இந்தியா பொய் சொல்வதாகவும் பாகிஸ்தான் கூறி வந்தது. அதுமட்டுமில்லாமல், PNS காஸி தொழில்நுட்ப காரணங்களால் கடலுக்கடியில் வெடித்து சிதறியது என்றும் கூறியது.

சதித்திட்டம் போட்டு மூழ்கிப் போன PNS காஸி

ஆனால், பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலான PNS காஸியின் சிதைவை இந்திய கடற்படை தற்போது கண்டுபிடித்துள்ளது. இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் உளவுத் தகவல்களைச் சேகரிக்கவும், இந்தியாவின் கம்பீரமான தரம் வாய்ந்த விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தை குறிவைத்து மூழ்கடிக்கவும் பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட PNS காஸியின் பாகங்கள் தற்போது விசாகப்பட்டின கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

pnsghaziwreckfoundbyindiannavy

இந்திய கடற்பகுதியில் PNS காஸியின் பாகங்கள்

USS டையப்லோ என அழைக்கப்படும் யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படையின் டென்ச் கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பலான இடிபாடுகள் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 2 முதல் 2.5 கிமீ தொலைவில் சுமார் 100 மீ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த உயிர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நீர்மூழ்கிக் கப்பலை தொந்தரவு செய்ய வேண்டாம் என இந்திய கடற்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் இவ்வளவு நாட்களாக PNS காஸியை நாங்கள் தேடவில்லை என்று இந்திய கடற்படை கூறி வந்த நிலையில் தற்போது PNS காஸியின் பாகங்கள் வெளிவந்துள்ளன.

காஸி அட்டாக் திரைப்படம் பாருங்கள்

இந்த சுவாரஸ்யமான இந்திய போராட்ட கதையைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள 'காஸிஅட்டாக்' திரைப்படத்தை ஒரு முறை பாருங்கள். நிச்சயம் உங்கள் மனதில் ஒரு நீங்காத நினைவை அந்த திரைப்படம் உருவாக்குவதோடு எப்படி நம் நாட்டு வீரர்கள் இந்தியாவுக்காக போராடியுள்ளனர் என்பதை பற்றிய புரிதலையும் வழங்கும்!

More News

    Read more about: interesting facts pns ghazi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+