• Follow NativePlanet
Share
» »10 சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே நீட்டிக்குமா - நாகர்கோவில்-தாம்பரம், திருநெல்வேலி-சென்னை!

10 சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே நீட்டிக்குமா - நாகர்கோவில்-தாம்பரம், திருநெல்வேலி-சென்னை!

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் உள்ள இடங்களுக்கு பல சிறப்பு ரயில் சேவைகளை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்துள்ளது!


இந்திய மக்களின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய ரயில்வே

மலிவு, விரிவான அணுகல் மற்றும் தினசரி மில்லியன் கணக்கானவர்களுக்கு சேவை செய்யும் திறன் ஆகியவற்றின் காரணமாக போக்குவரத்துக்காக இரயில்களை இந்திய மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்திய இரயில்வே தொலைதூர கிராமப்புறங்களை நகர்ப்புற மையங்களுடன் இணைக்கிறது, தினசரி 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்வதால், இந்திய ரயில்வே தனிப்பட்ட பயணத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பொருட்களை நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Train


சிறப்பு ரயில் சேவையால் பலனடைந்த மக்கள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 50 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் பெரிதும் பலனடைந்தனர்.


10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை நீட்டிக்க பரிந்துரை

டிசம்பர், ஜனவரி மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள். எனவே இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

Train

எந்தெந்த ரயில் சேவைகளுக்கு பரிந்துரை

1. ஞாயிறுதோறும் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் (06012) டிசம்பர் 1 முதல் 2025 பிப்ரவரி 2 வரை 10 ரயில் சேவைகள்.
2. மறுமார்க்கத்தில் திங்கள்தோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (06011) டிசம்பர் 2 முதல் பிப்ரவரி 3 வரை 10 சேவைகள்.
3. இரு மார்க்கங்களிலும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (06070/ 06069), திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030/ 06029), தாம்பரம் - கோவை (06184/ 06185) ஆகிய வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள்.
4. தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (06103/ 06104) ஆகிய ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு செய்யப் படும் போது, வரும் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: indian railways irctc chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+