• Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு நாளை தொடங்குகிறது!

சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு நாளை தொடங்குகிறது!

சொந்த ஊருக்கே செல்லாதவர்கள் கூட சொந்த ஊர் நோக்கி பயணிப்பது பொங்கல் விடுமுறையில் தான். சென்னையின் எந்த மூலையில் இருப்பவர்களும், தங்கள் சொந்த பந்தத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர். அதனால் சென்னையிலிருந்து பொங்கல் நேரத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் யாவும் முழு கொள்ளளவில் இயங்குகின்றன. இதனால் பொங்கல் 2025 க்காக தென்னக ரயில்வே சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பயணிகள்

சென்னையின் அசல் குடியிருப்பாளர்கள் யார் யாரென்று பொங்கல் விடுமுறையில் தான் நாம் தெரிந்துக் கொள்ளலாம். வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை, தமிழகத்தின் தலைநகராக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பல லட்ச மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பலரும், பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்கள் நோக்கி பயணிக்கின்றனர். இதனால் பொங்கல் நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாவதால், தென்னக ரயில்வேயும், தமிழக அரசும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றன.

Train

தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள சொந்த ஊர்கள் மற்றும் கிராமங்களுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது அதிகரித்து வரும் பயண தேவையை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கலின் போது ஐந்து கூடுதல் சிறப்பு ரயில்களின் முழு விவரம் இங்கே.

சென்னை தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்

தாம்பரம் மற்றும் திருச்சி இடையே 06190 மற்றும் 06191 என்ற எண்களுடன் ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும். ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் ஸ்பெஷல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மற்றும் 19. இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் மணிக்கு சென்றடையும் மதியம் 12:30 மணி, பின்னர் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

Train

சென்னை தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06093)

சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13ம் தேதி சிறப்பு ரயில் (எண். 06093) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12:30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.

சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103)

ஜனவரி 11, 13, 18 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் (எண். 06103) இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5:15 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.

சென்னை தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06091)

சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண். 06091) இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06089)

ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (எண். 06089) இயக்கப்படும். இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.

பயணிகள் மறக்காமல் உங்கள் தேவைகளுக்கு ஏற்றார்போல் ரயில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+