Search
  • Follow NativePlanet
Share
» »எழும்பூர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடல் – தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்பாடு மற்றும் நிறுத்தம்!

எழும்பூர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடல் – தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்பாடு மற்றும் நிறுத்தம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகள் தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, சென்னை எழும்பூர் நோக்கி வரும் ரயில்கள் யாவும் தாம்பரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு எந்தெந்த ரயில்களுக்கு எல்லாம் பொருந்தும் என்கிற தகவல்கள் கீழே!

மறுசீரமைக்கப்படும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடந்துகொண்டிருக்கும் தளம் மற்றும் குழி வரி வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் நிலையத்தை மறுவடிவமைப்பதிலும் தெற்கு ரயில்வே கவனம் செலுத்தி வருவதால் மறு சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தெற்கு ரயில்வே பல ரயில் சேவைகளுக்கு தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையம் எழும்பூர் ரயில் நிலையமாக சேவை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளது. சென்னை எழும்பூர் செல்லும் மற்றும் புறப்படும் ரயில்கள் யாவும் தாம்பரம் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும், மறு மார்க்கமாக தாம்பரம் ரயில் நிலையத்தை வந்து அடையும் என்றும் கூறியுள்ளது.

Southern railway

ரூ. 734.91 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ. 734.91 கோடி செலவில், மேம்படுத்தப்படவுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு ஓய்வறைகள், மேம்படுத்தப்பட்ட தளங்கள், சிறந்த விளக்குகள் மற்றும் எளிதான வழிசெலுத்தலுக்கான டிஜிட்டல் சிக்னேஜ் ஆகியவை அடங்கும். அத்துடன், மல்டி லெவல் பார்க்கிங், மேம்படுத்தப்பட்ட பிளாட்பாரங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன போக்குவரத்து மையமாக எழும்பூர் ரயில் நிலையம் மாறப் போகிறது.

தற்காலிகமாக எழும்பூர் ரயில் நிலையமாக செயல்படும் தாம்பரம்

ரயில் சேவையில் ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் வகையில் கட்டம் கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. செயல்முறையை எளிதாக்க ரயில் வழித்தடங்கள் மற்றும் அட்டவணைகளில் தெற்கு ரயில்வே மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடும் முன் அதிகாரப்பூர்வ தெற்கு ரயில்வே இணையதளத்தில் ரயில் அட்டவணைகள் மற்றும் வழித்தடங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Southern railway

மாற்றப்பட்ட ரயில் அட்டவணைகள்

1. ரயில் எண் 22663 (தாம்பரம் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்) நவம்பர் 23, 2024 முதல், இந்த ரயில் தம்பாரரத்திலிருந்து 14:50 மணி நேரத்தில் புறப்படும். இது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 15:20 வந்து சேர்ந்து 15:30 மணி அளவில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

2. ரயில் எண் 22664 (ஜோத்பூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்) நவம்பர் 26, 2024 முதல், இந்த ரயில் தம்பரம் 17:10 மணி அளவில் புறப்பட்டு செல்லும். இந்த ரயில் முன்னதாக சென்னை எழும்பூரில் இருந்து 16:10 மணி நேரத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்ததது.

3. ரயில் எண் 12667 (தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்) நவம்பர் 21, 2024 முதல், இரவு 7:30 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

4. ரயில் எண் 12668 (நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்) நவம்பர் 22, 2024 முதல், அதிகாலை 4:15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடையும்.

5. ரயில் எண் 20681 (தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்) நவம்பர் 20, 2024 முதல் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8:55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

6. ரயில் எண். 20682 (செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ்) நவம்பர் 21, 2024 முதல் அதிகாலை 4:25 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையம் வந்தடையும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+