Search
  • Follow NativePlanet
Share
» »ரூ.200 கோடியில் தயாராகும் தஞ்சை விமான நிலையம் - பணிகள் எப்போது துவங்கும்?

ரூ.200 கோடியில் தயாராகும் தஞ்சை விமான நிலையம் - பணிகள் எப்போது துவங்கும்?

இந்திய அரசால் 2016 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட UDAN திட்டம், சிறு நகரங்களையும் கூட விமான இணைப்பின் மூலம் மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலும் கூட திருச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. இப்போது தஞ்சாவூரிலும் கூட விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அதைப் பற்றிய சமீபத்திய செய்திகள் இதோ!

Airport

இந்திய விமான அமைச்சகத்திடம் நிலம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் விமான நிலையம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் ஒரு விமானப்படை நிலையம் ஆகும். இது இரண்டு ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படையின் மொத்த நிலமான 56.16 ஏக்கரில், தஞ்சாவூர் விமான நிலையம் 26.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் விமான நிலையத்தில் பரஸ்பர நில பரிமாற்றம் செய்வதற்காக AAI மற்றும் இந்திய விமானப்படை இடையே 2022 டிசம்பர் 1 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, விமான நிலையத்தை சிவில் என்கிளேவ் ஆக மேம்படுத்த முன்மொழிந்துள்ளது. IAF நிலத்தை AAI க்கு ஒப்படைத்துள்ளது.

உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டப்படும்

உத்தேச முனையத்திற்கும் தற்போதுள்ள விமானப்படை நிலையத்திற்கும் இடையே இணைப்புச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.விமானச் செயல்பாடுகளை செயல்படுத்த, பயணிகள் விமான இணைப்பை வழங்க, தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய உள்நாட்டு பயணிகள் முனையக் கட்டிடம் AAI ஆல் கட்டப்படும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை அமைக்க உதவுமாறு AAI மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரூ.200 கோடியில் தயாராகும் தஞ்சை விமான நிலையம்

தஞ்சை தென் மாவட்டங்களுக்கு ஒரு மைய புள்ளியாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை ஆகிய மாவட்டம் மக்களுக்கு பயன் தரும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்நாட்டு விமான செய்தியை துவங்க நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த விமான நிலையத்தில் நான்கு வழிச்சாலை அமைக்குமாறு தமிழக அரசிடம் விமான நிலையங்கள் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில டிட்கோ நிர்வாக அதிகாரிகள் இறங்க உள்ளனர். இதற்காக டிட்கோ நிர்வாகத்தின் தரப்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

UDAN இன் இரண்டாவது சுற்றில் அடையாளம் காணப்பட்ட தஞ்சை

பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (RCS) - UDAN-ன் கீழ் இரண்டாவது சுற்று போது, தஞ்சாவூர் (தஞ்சை) விமான நிலையம் விமானங்களின் வளர்ச்சி மற்றும் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டது. தஞ்சாவூரை சென்னை மற்றும் பெங்களூருடன் இணைக்கும் வழித்தடங்கள் 9 இருக்கைகள் கொண்ட விமானத்தைப் பயன்படுத்தி UDAN 4.2 இன் போது இயக்க ஏர் டாக்ஸிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் தயாரானதும், தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை தொடங்கலாம்.

இணைப்பு சாலை முடிந்தவுடன் முழு வீச்சில் பணிகள் துவங்கும்

தஞ்சாவூர் விமான நிலையம் பணிகள் துவங்குவதற்கு தாமதமாக இருப்பது, தஞ்சையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH-36 ஆகும். சிவில் என்கிளேவ் கட்டுமானமானது, NH-36 இலிருந்து தஞ்சாவூர் விமான நிலையத்திற்கு நேராக அணுகும் சாலை கிடைப்பதைத் தொடர்ந்து, இது தமிழ்நாடு அரசாங்கத்தால் எளிதாக்கப்பட உள்ளது. அதாவது விமான நிலைய கட்டுமானம் குறித்த நேரத்தில் நடந்தாலும், இந்த இணைப்பு சாலை அமைக்கப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கப்படும்.

More News

Read more about: airport tanjore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+