Search
  • Follow NativePlanet
Share
» »திருவல்லிக்கேணி சித்திரை பிரம்மோற்சவம் 2025 எப்போது ஆரம்பம் தெரியுமா?...முழு விபரம் இதோ

திருவல்லிக்கேணி சித்திரை பிரம்மோற்சவம் 2025 எப்போது ஆரம்பம் தெரியுமா?...முழு விபரம் இதோ

சென்னையில் உள்ள முக்கியமான, புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் பெருமாள், மகாபாரத போரில் அர்ஜூனனுக்கு தேரோட்டிய அதே திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். அதனால் இவர் பார்த்தசாரதி பெருளாம் என அழைக்கப்படுகிறார். வேறு எங்குமே இல்லாத சிறப்பாக இங்குள்ள பெருமாள், மீசையுடன் காட்சி தருகிறார்.

ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 2025ம் ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இது குறித்த முழு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வாய்ப்பு இருக்கும் பக்தர்கள் இந்த நாட்களில் சென்று பார்த்தசாரதி பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரலாம்.

சித்திரை பிரம்மோற்சவம் 2025 விபரம் :

ஏப்ரல் 11 - இரவு செல்வர் உற்சவம், புஷ்ப பல்லக்கு
ஏப்ரல் 12 - மாலை அங்குரார்ப்பனம், சேனை முதன்மையார்

முதல் நாள்

ஏப்ரல் 13 - காலை கொடியேற்றம்
இரவு 07.45 மணிக்கு புன்னை மர வாகனம்

2ம் நாள்

ஏப்ரல் 14 - காலை 06.15 சேஷ வாகனம், பரமபத நாதன் திருக்கோலம்
இரவு 07.45 மணிக்கு சிம்ம வாகனம்

3ம் நாள்

ஏப்ரல் 15 - காலை 5 மணிக்கு கருட சேவை (கோபுரவாசல் தரிசனம்)
காலை 11.30 ஏகாந்த சேவை
இரவு 07.45 ஹம்ச வாகனம்

4ம் நாள்

ஏப்ரல் 16 - காலை 06.15 சூரிய பிரபை
இரவு 07.45 சந்திர பிரபை

5ம் நாள்

ஏப்ரல் 17 - காலை 05.15 நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை
இரவு 8 அனுமன் வாகனம்

6ம் நாள்

ஏப்ரல் 18 - காலை 05.15 சொர்ணாபிஷேகம்
காலை 06.15 ஆனந்த விமானம்
இரவு 8 யானை வாகனம்

7ம் நாள்

ஏப்ரல் 19 - தேரோட்டம்
காலை திருத்தேர் எழுந்தருளல், திருத்தேர் வடம் பிடித்தல்
இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம்

8ம் நாள்

ஏப்ரல் 20 - காலை 06.15 வெண்ணெய் தாலி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை
இரவு 8 குதிரை வாகனம்

9ம் நாள்

ஏப்ரல் 21 - காலை ஆளும் பல்லக்கு
காலை 11 தீர்த்தவாரி
இரவு 07.45 கண்ணாடி பல்லக்கு

10ம் நாள்

ஏப்ரல் 22 - பகல் 12.30 துவாதச ஆராதனை
சப்தவர்ணம், சிறிய திருத்தேர்
கொடியிறக்கம்

ஏப்ரல் 23ம் தேதி துவங்கி ஏப்ரல் 30ம் தேதி வரை விடையாற்றி வைபவம் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலை 05.30 மணிக்கு பதி உலர்துதல் வைபவம் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 30ம் தேதி விடையாற்றி சாத்முறை, புஷ்ப பல்லக்கு ஆகிய சேவைகள் நடைபெற உள்ளன.

More News

    Read more about: chennai temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+