Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரப் பிரதேசத்தில் புதிதாக ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் – காரணம் என்ன!

உத்தரப் பிரதேசத்தில் புதிதாக ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் – காரணம் என்ன!

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய நாடு முழுவதும் உள்ள சில முக்கிய இடங்களுக்கு எட்டு நேரடி விமானங்களை ஏர் ஆசியா இந்தியா அறிமுகப்படுத்தியது.

டெல்லிக்கு மூன்று விமானங்களும், பெங்களூருக்கு இரண்டு விமானங்களும், மும்பை, கோவா மற்றும் கொல்கத்தாவுக்கு தலா ஒரு விமானமும் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

uttarpradeshsoontohave5airports

லக்னோ மற்றும் டெல்லி, பெங்களூரு மற்றும் கோவா இடையே ஆகஸ்ட் 5 முதல் விமானங்கள் தொடங்கப்பட்ட நிலையில், லக்னோ மற்றும் மும்பை மற்றும் கொல்கத்தா இடையே இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் தொடங்கும்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விமான சேவையை அறிமுகப்படுத்திய பின்னர், உத்தரபிரதேசத்தில் 5 சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் சிவில் விமான சேவையை ஊக்குவிப்பதற்காக தனது அமைச்சகம் மேற்கொண்ட பணிகள் குறித்து கருத்து தெரிவித்த சிந்தியா "உடான் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 63 புதிய வழித்தடங்களை நாங்கள் ஒதுக்கியுள்ளோம் என்பதை கூறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதை 108 அதிகரிக்க வாய்ப்புள்ளது, சிவில் விமானப் போக்குவரத்து உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு இடத்தையும் அடையும்.

உடான் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 18 விமான நிலையங்களுக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1,121 கோடி முதலீடு தேவைப்படுகிறது. அதன் பிறகு உத்தரப் பிரதேசத்தில் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் எனவும் உத்தரப் பிரதேசத்திற்கு அதுவே முக்கிய அடையாளமாக இருக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் 'ஆத்மநிர்பர் பாரத்' என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும், இதை அடைவதற்காக ஜெவார் மற்றும் அயோத்தியை தவிர சித்ரகூட், முராதாபாத், அலிகார், அசம்கர் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தப் புதிய திட்டங்கள் லக்னோவிற்கும் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இடையேயான தொடர்பை அதிகரிக்க உதவும், இது இப்பகுதியில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்த உதவும்.

இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும் இது மக்கள் சரியான நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றறொரு இடத்திற்கு பயணம் செய்யவும் உதவுகிறது. இந்த விமான நிலையங்களில் பெரும்பாலானவை பயணிகள் அதிகம் அறியப்படாத சில இடங்களை ஆராய்வதை எளிதாக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X