Search
  • Follow NativePlanet
Share
» »அடேங்கப்பா! 1.9 கிமீ நீளத்திற்கு உருவான உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் இதுதானாம்!

அடேங்கப்பா! 1.9 கிமீ நீளத்திற்கு உருவான உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் இதுதானாம்!

1.9 கிமீ நீளத்திற்கு உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை உருவாக்கி ஆல்ப்ஸ் மலைகள் வழியாக பயணிக்க வைத்து சுவிட்சர்லாந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மிக நீளமான இந்த பயணிகள் ரயில் 100 பெட்டிகளுடன் சுவிட்சர்லாந்தின் அழகிய ஆல்ப்ஸ் மலைகளை சுற்றி பயணித்தது. இதை எதற்காக உருவாக்கினார்கள், என்ன காரணம் போன்ற சுவாரஸ்யமான தகவல்களை கீழே காண்போம்!

175வது ஆண்டில் கால்பதித்த சுவிஸ் ரயில்வே

175வது ஆண்டில் கால்பதித்த சுவிஸ் ரயில்வே

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில்வே துறை ஆரம்பித்து 175வது ஆண்டு நிறைவடைந்துவிட்டது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராட்டியன் ரயில்வே (Rhaetian Railway - RhB) இந்த மாபெரும் முயற்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த ரயில் 25 புதிய கேப்ரிகார்ன் மின்சார ரயில்களில் இருந்து தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க பல மாதங்கள் எடுத்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பாதையில் பயணம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பாதையில் பயணம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பாதையான ப்ரீடாவில் உள்ள அல்புலா சுரங்கப்பாதையில் இருந்து பிலிசூருக்கு வெளியே உள்ள உலகப் புகழ்பெற்ற லேண்ட்வேசர் வயடக்ட் வரை இந்த ரயில் பயணித்தது. இந்த மாபெரும் ரயில் 19 முதல் 22 மைல் வேகத்தில் 48 பாலங்கள் மற்றும் 22 சுரங்கங்கள் வழியாக சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஏழு ஓட்டுநர்கள் மற்றும் 21 தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்ந்து இந்த ரயிலை இயக்கி உள்ளனர்.

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த சுவிட்சர்லாந்து

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த சுவிட்சர்லாந்து

ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில் வளைந்து நெளிந்து செல்லும் ஆல்ப்ஸ் மலையில் 100 ரயில் பெட்டிகள் சுழன்று திரும்புவதைப் பார்க்க பல ஆயிரம் பேர் வரிசையில் நின்றனர். பாலங்களைக் கடப்பது முதல் சுரங்கப்பாதைகள் வரை பல இடங்களில் ரயிலைக் காட்டும் வான்வழி காட்சியை சுவிஸ் ஊடகங்கள் ஒளிபரப்பின. பல பாலங்களையும் சுரங்கங்களையும் கடந்து அழகிய ஆல்ப்ஸ் மேல் பயணித்த ரயிலை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

30 ஆண்டு கால சாதனையை முறியடித்த ராட்டியன் ரயில்வே

30 ஆண்டு கால சாதனையை முறியடித்த ராட்டியன் ரயில்வே

பிரேடாவில் இருந்து பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கிய பயணம் சரியாக மாலை 3:30 மணிக்கு லேண்ட்வாசர் வயடக்டை அடைந்தது. இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும், உலக சாதனை படைத்ததில் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், அர்ப்பணிப்புள்ள கூட்டாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் குழுவிற்கு நன்றி எனவும் ராட்டியன் ரயில்வேயின் இயக்குநர் ரெனாடோ ஃபாசியாட்டி தெரிவித்தார்.

1991 இல் தேசிய பெல்ஜிய ரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்ட 70 பெட்டிகள் கொண்ட ரயிலே உலகின் மிக நீளமான ரயிலாக இருந்தது. இந்த சாதனையை இப்போது சுவிட்சர்லாந்தின் ராட்டியன் ரயில்வே முறியடித்துவிட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X