நிஜாமாபாத் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 200 கி.மீ தூரத்தில் மாநில தலைநகரான ஹைதராபாதில் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் தினசரி விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து நிஜாமாபாத் நகரம் வருவதற்கு பிரிபெய்டு டாக்சிகள் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையான வாடகையில் கிடைக்கின்றன.