IRPPL-என்ற குழுமத்தால் உருவாக்கப்பட்டுள்ள தி கிரேட் இண்டியா பிளேஸ் நாட்டிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் வளாகங்களில் ஒன்றாகும். நோய்டாவில், செக்டார் 18-ல் உள்ள வேர்ல்ட்ஸ் ஆஃப் ஒன்டர் - WOW என்ற பொழுது போக்கு பூங்காவின் ஒரு பகுதியாக 1,39,400 ச.மீ பரப்பளவில் இந்த ஷாப்பிங் வளாகம் அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் அறியப்படும் பல்வேறு வகையிலான பிராண்டட் ஷோரூம்களின் இருப்பிடமாக இந்த வளாகம் அமைந்துள்ளது. ஷாப்பர்ஸ் ஸ்டாப், குளோபஸ், பாண்டலூன்ஸ், பிக் பஜார், ஹோம் டவுன், உட்லேண்ட், லைப் ஸ்டைல், லைப் ஸ்டைல் ஹோம், அடிடாஸ், நைக், கெஸ் மற்றும் மார்க்ஸ் & ஸ்பென்சர் போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் கடைவிரித்துள்ள இடமாக இந்த வளாகம் விளங்கி வருகிறது.
பல்வேறு பகுதிகளாகவும் மற்றும் மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு, பல தளங்களில் பரந்து விரிந்திருக்கும் வளாகமாக இது உள்ளது. உதாரணத்திற்கு, இந்த வளாகத்தின் தரை தளத்தில் வீட்டு உபயோக பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான உடைகள் ஆகியவை கிடைக்கின்றன.
இந்த வளாகத்தின் மேல் தளத்தில் சுமார் 1220 பேர் அமர்ந்து பார்க்கு வசதியையுடைய ஆறு பல்லடுக்கு திரையரங்குகளும் உள்ளன. பிறகு, சுமார் 850 ச.அடி பரப்பளவில் வெட்டிங் பஜார் என்ற திருமணப்பொருட்களுக்கான பகுதியும் உள்ளது. உங்கள் வீட்டை பராமரிப்பதற்கு தேவையான பொருட்கள் ஹோம் சாஸ் என்ற பிரிவில் கிடைக்கும்.
நொய்டாவின் பரபரப்பான ஷாப்பிங் மையங்களில் சிறந்த இடமாக தி கிரேட் இண்டியா பிளேஸை சொல்லலாம்.



Click it and Unblock the Notifications