பச்மாரியில் உள்ள அழகிய அருவியான தேனீ நீர்வீழ்ச்சி ஜமுனா பிரபாத் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பச்மாரி பள்ளத்தாக்கின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. தேனீ நீர்வீழ்ச்சி அழகிய ஓங்காரத்தோடு பாயும் ஒரு வசீகரமான நீர்வீழ்ச்சியாகும்.
இந்த அருவியின் கீழ்ப்பகுதியில் ஒரு குளமும், மேல்பகுதியில் ஒரு குளமும் காணப்படுகின்றன. சாகச விரும்பிகள் இந்த நீரோடையைத் தாண்டி மற்றொரு குளியல் குளமான ரஜத் பிரபாத்திற்கு இந்த தேனீ நீர்வீழ்ச்சியின் வழியாகச் செல்லலாம். அப்ஸரா விஹாரிலிருந்து, தேனீ நீர்வீழ்ச்சி வழியாக, ரஜத் பிரபாத்தை அடையும் சாகசம் நிறைந்த பயணமானது இளைஞர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இங்கு ஒருமுறை வந்து செல்வோரின் நினைவில் நீங்கா இடம்பிடிக்கக்கூடியதான இந்த நீர்வீழ்ச்சியின் ஏகாந்தம் மற்றும் இயற்கை அழகு, இதன் வழியே கடந்து செல்லும் எந்த ஒரு பயணியின் கவனத்தையும் கவரக்கூடியதாகவும் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பச்மாரி வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications