கிறிஸ்து தேவாலயம், பச்மாரியில் ஆங்கிலேயரால் 1875 ஆம் வருடம் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் ஆகும். இந்த தேவாலயத்தின் கட்டுமான பாணி ஐரோப்பிய பாணிகளுடன், ஐரீஷ், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பாணிகளும் சேர்ந்த கலவையாகக் காணப்படுகிறது.
அசரடிக்கும் அழகுடன் காணப்படும் இந்த தேவாலயத்தின் கண்ணாடிக் கதவுகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வியக்க வைக்கும் அரைவட்ட வடிவ கூம்புடன் காணப்படும் இந்த தேவாலயத்தின் மையப்பகுதி, தூண்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலமான இந்த இடம், மேற்கத்திய கட்டுமான பாணியின் சிறப்பை எடுத்துக் கூறுவதாகவும் உள்ளது. ஐரோப்பிய கட்டிட பாணிகளைத் தழுவி கட்டப்பட்ட இந்த தேவாலயக் கட்டிடத்தைக் காண வருடம் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.



Click it and Unblock the Notifications