ஹண்டி கோ என்பது பச்மாரி வனப்பகுதியில் காணப்படும் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு அல்லது மலைக்கணவாய் ஆகும். சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் கடினமான பாறைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.
தனிமை சூழ்ந்த மனதுக்குகந்த இடமான இங்கு, தேனீக்களின் ரீங்காரம் மற்றும் அருவியின் ஓங்காரத்தை மட்டுமே கேட்க முடிகிறது.
இங்கு உலவும் நாட்டுப்புறக் கதையின் படி, ஹண்டி கோ பகுதியில் ஒரு ஏரி இருந்ததாகவும், அதனை தீயகுணம் படைத்த, விஷப்பாம்பு வடிவில் இருந்த அரக்கன் ஒருவன் காவல் காத்து வந்ததாகவும், ஒரு சமயம் சிவபெருமானுக்கும், அந்த அரக்கனுக்கும் இடையே நடந்த யுத்தத்தின் போது அந்த ஏரி வற்றி, அவ்விடத்தில் இந்த கணவாய் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
இது பானை வடிவில் இருப்பதினால் ஹண்டி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பச்மாரி மக்கள் இதனை அந்தி கோ என்று அழைத்து வந்தனர்; பின்னர் இப்பெயர் மருவி ஹண்டி கோ என்றழைக்கப்பட்டு வருகிறது. ஹண்டி கோ அதன் வியக்க வைக்கும் இயற்கை அழகிற்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications