பாலக்காடு நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் காஞ்சிரப்புழா நகரம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் எழிலே உருவாய் காட்சியளிக்கும் காஞ்சிரப்புழா அணைக்காக மிகவும் பிரபலம்.
காஞ்சிரப்புழா அணையும், நீர்த்தேக்கமும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. அதோடு இந்த நீர்த்தேக்கம் வெட்டிலச்சோலா எனும் பசுமையான காட்டுப் பகுதிக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது.
காஞ்சிரப்புழா அணையில் எண்ணற்ற மீன் இனங்கள் காணப்படுவதால் கேரள மீன் வளத் துறை இந்த அணையை மீன் இனவிருத்தி செய்யும் இடமாக பயன்படுத்தி வருவதோடு, இதன் மூலம் கேரளா அரசுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது.
காஞ்சிரப்புழா அணை பனி படர்ந்த மலைகளுக்கும், பசுமையான அடர் வனங்களுக்கும் மத்தியில் அமைந்திருப்பதால் இந்த அணை சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல் புகைப்படக்காரர்களையும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது.
எனவே நீங்கள் பாலக்காடு சுற்றுலா வரும்போது இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சிரப்புழா நகரையும், அணையையும் தவறவிட்டுவிடக் கூடாது.



Click it and Unblock the Notifications