பாலம்பூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள இந்த அல் ஹிலால் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். அல் ஹிலால் எனும் பெயருக்கு வளர்பிறை என்பது பொருளாகும். அல் ஹிலால் ஸ்தலத்திலிருந்து பயணிகள் தௌலாதார் மலைத்தொடரின் ரம்மியமான எழிற்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
மஹாராஜா ரஞ்சித் சிங்கின் படைக்கேந்திரமாக இப்பகுதி பயன்பட்டதாக சொல்லப்படுகிறது. அல் ஹிலால் ஸ்தலத்திற்கு அருகிலேயே உள்ள தாராகர் எனும் அரண்மனை விடுதியில் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் கிடைக்கின்றன. 15 ஏக்கர் பரப்பளவில் இந்த தாராகர் கோட்டை வளாகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications