தௌலாதார் தேசியப்பூங்கா அல்லது கோபால்பூர் வனவிலங்குப்பூங்கா என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான சுற்றுலா அம்சம் பாலம்பூரிலிருந்து 199 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் இந்த தேசிய வனவிலங்கு பூங்கா பரந்து காணப்படுகிறது.
தௌலாதார் தேசியப்பூங்காவில் பலவகையான விலங்குகள் வசிப்பதால் காட்டுயிர் ரசிகர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஸ்தலமாக இது திகழ்கிறது. இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய வனவிலங்கு காட்சிக்கூடத்தில் சிறுத்தை, கருப்பு கரடி, அங்கோரா முயல், ஆசிய சிங்கம், சாம்பார் மான், சிவப்பு நரி மற்றும் பலவகையான மான்களை பயணிகள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications