நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெவ்கல் காட் எனும் இடம் பாலம்பூர் பகுதியின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. புண்ட்லா சாஸம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஸ்தலத்தின் விசேஷம் இங்கு அமைந்துள்ள 300 மீட்டர் அகலமுடைய ஒரு நீரோடையாகும்.
சுற்றிலுமுள்ள தௌலாதார் மலைகளின் எழிற்காட்சிகளை ரசித்தபடி பிக்னிக் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு இந்த நெவ்கல் காட் ஸ்தலம் மிக ஏற்றதாக உள்ளது. மழைக்காலத்தின் போது இன்னும் ரம்மியமாக பசுமையான சூழலுடன் இப்பகுதி காட்சியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே ஏராளமான பயணிகள் மழைக்காலத்தில் இந்த நெவ்கல் காட் பிக்னிக் ஸ்தலத்திற்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications