பாலம்பூர் பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஷெர்ப்லிங் எனும் ஸ்தலம் புகழ் பெற்றுள்ளது. இங்கு ஒரு பிரம்மாண்டமான புத்த விஹாரம் அல்லது மடாலயம் அமைந்துள்ளது.
டாய் சிட்டி ரிம்போச்சே எனும் பிரபல்யமான மதகுரு கம்பீரமான மலைகள் சூழ்ந்த இந்த இடத்தை தியான ஸ்தலமாக தேர்வு செய்து வாழ்ந்துள்ளார். பசுமையான தாவரங்கள் மற்றும் மரங்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான ஸ்தூப அமைப்பை பயணிகள் இந்த ஸ்தலத்தில் பார்க்கலாம்.
அமைதிப்பிரதேசத்தை நாடும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பௌத்த யாத்ரீகர்கள் இந்த ஷெர்ப்லிங் ஸ்தலத்துக்கு வருடம் முழுவதும் விஜயம் செய்தவண்ணம் உள்ளனர். இந்த மடாலயத்தின் குருவான ரிம்போச்சே ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்காக ஆன்மீக உரையாற்றி ஆசி வழங்குகிறார்.



Click it and Unblock the Notifications