Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழனி » ஈர்க்கும் இடங்கள் » இடும்பன் ஆலயம்

இடும்பன் ஆலயம், பழனி

14

பழனிக்கு சுற்றுலா வரும்போது கண்டிப்பாக இடும்பன் ஆலயத்தை பயணிகளும், பக்தர்களும் தவறவிட்டுவிடக் கூடாது. அகத்திய முனிவரின் காலத்தில் இருந்தே இந்த ஆலயம் இருந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த இடும்பன் ஆலயம் பழனியில் உள்ள இடும்பன் மலையில் அமைந்திருக்கிறது.

ஒரு முறை அகத்திய முனிவர் இந்தியாவில் தங்க வேண்டும் என்பதற்காக தனது உதவியாளரான இடும்பனை, சிவகிரி மலை மற்றும் சக்திகிரி மலைகளைத் தூக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டார்.

இந்த இடும்பன் ஒரு காலத்தில் தீமையின் வடிவமாக இருந்து அசுரர்களுக்கும், சூரர்களுக்கும் இடையே போர் ஏற்பட காரணமாக இருந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போர் முடிந்த பின்பு முருகப் பெருமானின் பக்தனாக இடும்பன் மாறிவிட்டான்.

அதற்கு பின் இந்த ஆலயம், அது அமைந்திருக்கும் மலை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் ஆகியவை இடும்பன் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த இடும்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

மேலும் பழனிக்கு வருபவர்கள் தாங்கள் முருகனிடம் வேண்டிக் கொள்ளும் காரியம் நிறைவேற வேண்டும் என்றால் அவர்கள் இடும்பனைச் சந்தித்து அஞ்சலி செலுத்து வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue