Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பனாஜி » ஈர்க்கும் இடங்கள் » கேசினோ ராயல்

கேசினோ ராயல், பனாஜி

33

இந்தியாவை பொறுத்தவரை கேமப்ளிங் என்ற வார்த்தையையே பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேம்ப்ளிங் விளையாட விரும்பினால், கோவாவில் உள்ள கேசினோ ராயலுக்கு வருவதை தவிர வேறு வழி இல்லை. அதுமட்டுமல்லாமல் இது தான் இந்தியாவில் இருக்கக் கூடிய ஓரே மிதக்கும் கேசினோ.

கேசினோ ராயல் அமைந்திருக்கும் கப்பல், கடலில் தன்னுடைய பிரயாணத்தை தொடங்கிய உடனேயே அனைத்து கேம்ப்ளிங் விளையாட்டுகளும் களைகட்ட தொடங்கி விடும்.

அப்போது அமெரிக்கன் ரௌலெட், போக்கர், பிளேக் ஜேக், மணி வீல், பக்காரட், பாண்டூன், கிராப்ஸ், ஸ்லாட் மெஷின்ஸ் போன்ற சூதாட்டங்களில் அனைவரும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அதோடு இங்கு பெரும்புள்ளிகளுக்கென தனியறையும் இருக்கிறது.

கேசினோ ராயலின் கேளிக்கைகள் வெறும் கேம்ப்ளிங் விளையாட்டுகளுடன் முடிந்துவிடாது. இந்தக் கப்பலில் உள்ள சைனா கார்டன் என்ற உணவகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது. அதோடு இந்த உணவகத்தில் நடத்தப்படும் ரஷ்ய குழுவினரின் பெல்லி நடன நிகழ்ச்சி அட்டகாசத்தின் உச்சம்.

கேசினோ ராயலுக்குள் நுழைவதற்கு ஒரு இணை 4000 ரூபாய்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு மது மற்றும் உணவுடன், 3000 மதிப்புள்ள திரும்பப்பெற இயலாத கூப்பன் ஒன்று தருவார்கள்.

அதை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம். குறிப்பாக தொடக்க நிலை கேம்ப்ளர்களுக்கென்று பிரத்தியேகமாக எளிமையான விளையாட்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அனுபவ கேம்ப்ளர்கள் ஸ்லாட் மெஷின்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.

மேலும் இங்கு குழந்தைகளோடு வரும் பயணிகள் கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால் உங்கள் குழந்தைகள் தூங்குவதற்கும், விளையாடுவதற்கும் இங்கு தனிப்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே ஜோடியாக நீங்கள் உங்கள் நேரத்தை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு இங்கு வரும் நட்சத்திர தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகம்.

எப்படி பார்த்தாலும் உங்களுடைய மாலை நேரம் முழுவதும் கேளிக்கையும், கொண்டாட்டமுமாக கழியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதுமட்டுமல்லாமல் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் இந்தியாவில் இருப்பதையே மறந்து போய் விடுவீர்கள்.

கேசினோ ராயல் வெகுப் பிரசித்தம் என்பதால் எல்லோருக்கும் இந்த இடம் நன்றாக தெரியும். எனவே வாடகை கார்களின் மூலம் கேசினோ ராயல் இருக்கும் இடத்தை நீங்கள் சுலபமாக அடைந்து விடலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed