முக்தலேஷ்வர் கோயில் பர்பானி கிராமத்திலேயே அமைந்துள்ளது. கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது.ஆறு ஓடும் பிரவாகத்தின் நடுவிலேயே இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.நரசிம்ம ஸ்வாமி கடவுளுக்காக இங்கு ஒரு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் வாசலில் கோயில் உருவான வரலாறு கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் இந்த கோயில் ஆற்று நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது. எனினும் தீவிர பக்தர்கள் ஆற்றில் குதித்து நீந்தி சென்று இந்த கோயிலில் வழிபடுகின்றனர்.
இந்த கோயில் ஸ்ரீ சாஹேப்ராப் முத்கல்கர் மற்றும் சுபாஷ்ராவ் முத்கல்கர் என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.



Click it and Unblock the Notifications